உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை பற்றி தெரியாதா? திமுகவில் வாடகை பேச்சாளர்கள்: நாஞ்சில் சம்பத்
சென்னை: "திமுகவில் யாரை எதிர்க்கட்சித் தலைவராக ஆக்குவது, யாரைத் துணைத் தலைவராக ஆக்குவது என்பது அந்தக் கட்சியின் முடிவு. இதில் நான் கருத்துச் சொல்ல முடியாது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக கே.என். நேரு அல்லது ஐ. பெரியசாமி போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களை நியமித்திருக்க வேண்டும் என்பது என் கருத்து" என்று தவெக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
என்னைப்போல எவரையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட பேச்சாளர் தி.மு.க-வில் எவரும் இல்லை. முன்பு திமுக சொற்பொழிவாளர்களின் சொர்க்கமாக இருந்த இயக்கம், இன்று வாடகை பேச்சாளர்களை வைத்துக்கொண்டு இயங்கும் நிலைக்கு வந்துவிட்டது. அந்த இயக்கத்தில் யார் பேசுவது என்றே தெரியாத நிலை இருக்கிறது..

வாடகை பேச்சாளர்கள்
திமுக தனது உண்மையான இருப்பைத் தொலைத்துவிட்டு அம்மணமாக நிற்கிறது. நான் இன்னும் பெரியார் மற்றும் அண்ணாவை பற்றி பேசி வருவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதனால்தான் அவர்கள் என் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.
திமுகவினர் என்னைத் தாக்குவதன் மூலம் அவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சி கிடைக்குமானால், அந்தத் தாக்குதல்களுக்கு நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை" என்று மனம் நொந்து பேசியிருக்கிறார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் யார்
காவிரி நதிநீர் தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார்.
அந்தப் பொதுப்பணித் துறை தொடர்பான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சரான துரைமுருகன் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அவர் இல்லை.. அந்த துறையைப் பற்றிப் போதிய அறிவு இல்லாத உதயநிதி ஸ்டாலின் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் யார்
திமுகவில் யாரை எதிர்க்கட்சித் தலைவராக ஆக்குவது, யாரைத் துணைத் தலைவராக ஆக்குவது என்பது அந்தக் கட்சியின் முடிவு. இதில் நான் கருத்துச் சொல்ல முடியாது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக கே.என். நேரு அல்லது ஐ. பெரியசாமி போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களை நியமித்திருக்க வேண்டும் என்பது என் கருத்து..
கேஎன் நேரு 1986-ல் புள்ளம்பாடி யூனியன் சேர்மன், 1989-ல் லால்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், அதே ஆண்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எனப் பணியாற்றியவர். இன்று ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலுக்கே அச்சாரம் எழுதியவர் அவர். அல்லது அண்ணன் ஐ. பெரியசாமியை ஆக்கியிருக்கலாம். அவர் 1986-ல் ஆத்தூர் ஒன்றிய பெருந்தலைவர், 1989-ல் இரண்டே கால் லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இத்தகைய அனுபவம் வாய்ந்தவர்களைப் பொறுப்பில் அமர்த்தியிருக்கலாம் .
பிரதமராகும் சாத்தியக்கூறு விஜய்க்கு உள்ளதா
இந்திய பிரதமராகும் சாத்தியக்கூறுகள் விஜய்க்கு உள்ளது.. தமிழ்நாட்டிலிருந்து இதுவரை யாரும் பிரதமராக வரவில்லை.. ஆந்திராவிலிருந்து நரசிம்மராவும் கர்நாடகாவிலிருந்து தேவகௌடாவும் பிரதமராக உயர்ந்தது போல, தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதம மினிஸ்டர் உருவானால் அந்த வாய்ப்பு விஜய்யை நோக்கியே அமையும்..
ஏனென்றால் விஜய்க்கு தேசிய அளவில் அபாரமான செல்வாக்கு உள்ளது.. டெல்லியில் சிபிஐ விசாரணைக்குச் சென்றபோதே அவருக்காக கூடிய கூட்டமே சாட்சி.. கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் 10 தொகுதிகளை கேட்கலாம், அந்த மாநிலங்களில் அவருக்கு செல்வாக்கு அதிகம். அதற்காக விஜய் உடனடியாகப் பிரதமர் ஆகிவிடுவார் என்று தான் சொல்ல வரவில்லை.
ராகுல்காந்தி விஸ்வரூபம்
ஆசாபாசங்களுக்கு அடிபணியாத தலைவர் ராகுல்காந்தி, ஒரு மாபெரும் தலைவராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்..இந்திய துணைக்கண்டத்தில் ஒரு மரபார்ந்த குடும்பத்துப் பிள்ளை ராகுல் காந்தி.. மோடியின் ஆட்சியை "ராட்சச" பாசிசத்தின் கன்னத்தில் அறைகிற ஆற்றலும் கொண்ட ஒரு தலைவராக ராகுல் காந்தி இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.. அப்படிப்பட்ட காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளோம்" என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
