சென்னையே மாறுது.. ரூ.16212 கோடியில் சென்னை எல்லைச் சாலை திட்டம்.. களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். ரூ.16212.40 கோடி மதிப்பில் எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் வரை 133 கி.மீ தொலைவிற்கு ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும் சென்னை எல்லைச் சாலை திட்டத்தையும் ஆய்வு செய்தார்.

1) தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைத்தல்.
2) ராஜிவ் காந்தி சாலையையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலை.
3) ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பூங்கா சந்திப்பில் நடைபெறும் "U" வடிவ மேம்பாலப் பணி.
4) பெருங்களத்துரர் இரயில்வே மேம்பாலப் பணி.
5) தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை
6) மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலப் பணி ஆகிய பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

udhayanidhi stalin dmk chennai

சாத்தியக்கூறு ஆய்வு: மேலும் சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட வேண்டிய கீழ்க்கண்ட தொலைநோக்கு திட்டங்களின் சாத்தியக் கூறு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

1) கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை கடல்வழிப்பாலம் அமைத்தல்.
2) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்டச் சாலை அமைத்தல்.
3) மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தாம்பரம் வரை உயர்மட்டச் சாலை அமைத்தல்.
4) பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள சாலையில் ஐந்து சந்திப்புகளில் மேம்பாலம் அமைத்தல்.
5) பல்லாவரம் முதல் சென்னை வெளிவட்டச்சாலையை இணைக்கும் உயர்மட்டச் சாலை.
6) படப்பை - மணிமங்கலம் - வரதராஜபுரம் வரையான சாலையை இணைக்கும் புறவழிச்சாலை அமைத்தல் ஆகிய திட்டங்களின் சாத்தியக் கூறு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் நகர்ப்புறங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் முக்கிய மாநகரங்களான மதுரை, திருச்சி, கோயம்புத்துரர், ஓசூர், வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றில் நடைபெறும் முக்கிய பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை எல்லைச் சாலை திட்டம் (CPRR): மேலும், சென்னை மற்றும் எண்ணுார் துறைமுகங்களில் கையாளும் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால், சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாநிலத்தின் தெற்குப் பகுதியிலிருந்தும், மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் எண்ணுார் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு சென்றடைய, சென்னை பெருநகரத்தின் வணிக மற்றும் தொழில் வளத்தினை அதிகரிக்கும் வகையில் "சென்னை எல்லைச் சாலை திட்டம்" 133 கி.மீ நீளத்தில் (நில எடுப்பு உட்பட) ரூ.16,212.40 கோடி மதிப்பீட்டில் ஆறுவழி சாலையுடன் கூடிய இரு புறமும் இரு வழி சேவைச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் 5 கட்டங்களாக எண்ணுார் துறைமுகம் முதல், தச்சூர், திருவள்ளூர் புறவழிச்சாலை, ஸ்ரீபெரும்புதுர், சிங்கபெருமாள் கோவில் வழியாக மாமல்லபுரம் வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை எல்லைச் சாலை பணிகளில் முதல் கட்டப் பணிகள் எண்ணுார் துறைமுகம் முதல் தச்சூர் வரை 25.40 கி.மீ. நீளத்திற்கும் ரூ.4290 கோடி மதிப்பீட்டிலும் (நில எடுப்பு உட்பட), இரண்டாம் கட்டப் பணிகள் தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை 26.10 கி.மீ. நீளத்திற்கு ரூ.2259 கோடி மதிப்பீட்டிலும் (நில எடுப்பு உட்பட)நடைபெற்று வருகின்றன.

உதயநிதி ஆய்வு: இந்த பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாமரைப்பாக்கத்தில் கள ஆய்வு நடத்தினார். இந்த திட்டங்களை விரைவாகவும், தரத்துடனும் செயல்படுத்தி முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

udhayanidhi stalin dmk chennai

இந்தக் ஆய்வு கூட்டம் மற்றும் கள ஆய்வில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது, நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் துறை அரசு செயலாளர். ஆர்.செல்வராஜ், சென்னை எல்லைச் சாலைத் திட்டத்தின் இயக்குநர் சி.அ. ராமன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர். த.பிரபு சங்கர்,. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் ட்வீட்: இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் எதிர்கால போக்குவரத்து வசதிகளையும் - தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு "சென்னை எல்லைச் சாலை திட்டம் (CPRR)" ரூ.16212.40 கோடி மதிப்பில் எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் வரை 133 கி.மீ தொலைவிற்கு ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது.

ஐந்து கட்டங்களாக நடைபெறும் இந்த பணிகளின் இரண்டாம் கட்டம் முடிவுறும் நிலையை எட்டியுள்ள சூழலில், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச்சாலையை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.

அடித்தளத்தில் இருந்து மேற்பரப்பு வரை சாலை பயன்படுத்தப்பட்ட கற்களின் மாதிரிகளை பார்வையிட்டு, வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சாலையின் தடிமன் உள்ளதா என்பதை ஆய்வு செய்தோம். படிப்படியாக பணிகள் நடைபெற்ற விதம் குறித்து அங்கிருந்த பொறியாளர்கள் எடுத்துக் கூறினார்கள். விரைவாகவும் முழுமையான தரத்துடனும் பணிகளை முடித்திடுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+