'துணை முதல்வர் பதவி.. சூப்பர் ஸ்டார் ரஜினி ஆவேசம்'.. தலைப்பை பார்த்து பயந்து போன உதயநிதி ஸ்டாலின்
சென்னை: 'யூடியூபில் என்னைப் பற்றிய ஒரு வீடியோவில் ஒரு டைட்டில் வைத்திருந்தார்கள். அதை படித்து பார்த்ததும் பயந்துட்டேன்' என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த், பதில் அளிக்கும் போது, அரசியல் குறித்து தன்னிடம் கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டு, வேகவேகமாக விமான நிலையத்திற்குள் சென்றார். அதை பற்றித்தான் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசினார்.
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், "நான் இன்று(நேற்று) என்னை பற்றிய ஒரு வீடியோவை யூடியூப்பில் பார்த்தேன். அந்த வீடியோவை திறந்து பார்த்து நானே பயந்து போய்விட்டேன்.. என்ன தெரியுமா தம்ப்நெய்ல் தலைப்பு.. உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேசம், இந்த தலைப்பை பார்த்து நான் பயந்துட்டேன்.. நான் துணை முதல்வர் ஆகப்போகிறேனா இல்லை என்பது குறித்து இன்னமும் அறிவிப்பே வரவில்லை..

துணை முதல்வர்: இதுபற்றி முழு உரிமையும் முதலமைச்சர்கிட்டதான் இருக்கிறது. அவரிடம் தான் இதுபற்றி கேட்க வேண்டும்.. இதை பற்றி தொடர்ந்து கேட்டிருக்கீங்க சரி (செய்தியாளர்கள்).. ஆனால் நீங்கள் சாலையில் சென்று வருவோர் என அனைவரிடமும் மைக்கை நீட்டி, உதயநிதி துணை முதல்வராக போகிறாராமே, உங்கள் கருத்து என்ன என்று கேட்கிறீர்கள்.. என்னிடம் இதுபற்றி கேட்டீர்கள் சரி..
ரஜினிகாந்த் ஆவேசம்: ஆனால் ரஜினி சார் பாவம் அவர், படப்பிடிப்பிற்காக விமான நிலையத்திற்கு போகிறார்.. அவரைப் போய் வழிமறித்து , இடம் கொடுக்காமல்...அவருக்கு பிளைட்டுக்கு டைம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.. அவர்கிட்ட போய் மைக்கை நீட்டினார்கள்.. ஆனால் அவர்(ரஜினி), என்னிடம் அரசியல் பற்றியே கேட்காதீங்க என்று சொல்லிவிட்டு போய் விட்டார். ஆனால் யூடியூப்பில் வைத்துள்ள தலைப்பு என்ன.. படித்தால் என்னவென்று தோன்றும்... உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா.. சூப்பர் ஸ்டார் ரஜினி ஆவேசம் என்று தான் தோன்றும்.. அதனால் பத்திரிக்கை நண்பர்களே பார்த்து பதிவிடுங்கள். இதற்கும் எப்படி பதிவிடுவீர்கள்... உதயநிதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பதிலடி.. அப்படீன்னு வைப்பீர்கள்..
பாஜக கூட்டணி கட்சிகள்:ஒரு மிஸ்டு கால் கொடுத்தாலே பாஜகவில் சேரலாம் அப்படீன்னு சொல்லி விளம்பரம் எல்லாம் செய்தார்கள்.. ஆனால் அவர்கள், தங்களது சொந்த காலில் நிற்க முடியாமல், சந்திரபாபு நாயுடு காலையும், நிதீஷ்குமாருடைய காலையும் பிடித்துக் கொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.. இந்த புத்தகத்தில் பத்திரிக்கையாளர் ஏஎஸ் பன்னீர்செல்வம் ஒரு முக்கியமான கருத்தை எழுதி உள்ளார். அதாவது பாஜக உடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலைமை என்னாகி உள்ளது என்பதை திறன் ஆய்வு செய்து கட்டுரையாக எழுதி உள்ளார்.
அதிமுக முதலிடம்: மகாராஷ்டிராவில் சிவசேனா காணாமல் போய்விட்டது.. காஷ்மீரில் மக்கள் மாநாட்டு கட்சி எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.. ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் இப்படி பல்வேறு கட்சிகளை பாஜக காலி செய்துள்ளது. பாஜக இப்படி காலி செய்த கட்சிகளின் பட்டியலில் முதல் இடத்தில் நிற்கும் கட்சி எது தெரியுமா? அதிமுக.. இப்படி பாவப்பட்ட நிலைக்கு நமது எதிர்க்கட்சி தள்ளப்பட்டுள்ளது.. அதில் இருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும் என்பது தான் என்னை போன்றவர்களின் ஆசை...
மோடி பயப்படுவார்: சங்கிகள் எல்லாம் எப்போது பார்த்தாலும், எங்கள் மோடியை பார்த்து அமெரிக்காவே பயப்படுகிறது. ஐரோப்பாவே நடுங்குகிறது.. எங்கள் மோடியை பார்த்து அண்டார்டிகா உருகி போய்விட்டது , இப்படி எல்லாம் உருட்டுவார்கள்.. ஆனால் இப்போது ஆந்திராவில் போய் கேட்டுப் பாருங்கள்.. மோடி யாரை பார்த்து பயப்படுகிறார் என்று தெரியும். ஆந்திரா முழுக்க சொல்வார்கள்.. சந்திரபாபு நாயுடுவை பார்த்து தான் பிரதமர் மோடி பயப்படுவார் என்று சொல்வார்கள்" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ரஜினி பற்றி பேசிய சர்ச்சை அடங்குவதற்குள் புதிய பஞ்சாயத்தை இழுத்த ஆதவ்! மாணிக்கம் தாகூர் கடும் கோபம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications