அதே டெக்னீக்.. மூன்றே வாரம்தான்.. எல்லோரையும் "ஓவர்டேக்" செய்த உதயநிதி.. ஆடிப்போன திமுக நிர்வாகிகள்
சென்னை: திமுக சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதன் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.
திமுக சார்பாக தமிழக சட்டசபை தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ததை விட தமிழகம் முழுக்க உள்ள மற்ற தொகுதிகளில்தான் இவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக திமுகவிற்காக தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்யும் ஒரே நிர்வாகி உதயநிதி ஸ்டாலின் மட்டும்தான். கடந்த 3 வார பிரச்சாரங்களில் திமுக எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் உதயநிதி அதிகம் ரீச் ஆகியுள்ளார்.

ரீச்
திமுக என்றாலே ஒரு காலத்தில் தூய தமிழ் பேச்சு, அதிரடி உரையாடல், இலக்கிய நயமான பேச்சு என்று இருந்ததை மாற்றி உதயநிதி ஸ்டாலின் மக்களோடு மக்களாக எளிதாக கனெக்ட் ஆகி வருகிறார். வெறுமனே வேனில் மிதந்தபடி பேசி செல்லாமல் முடிந்த அளவு மக்களோடு மக்களாக பேசி, அவர்களையும் பேச வைத்து, புதிய முறையில் உதயநிதி பிரச்சாரம் செய்கிறார். எங்கும் ஈகோ பார்க்காமல் ஊர் பையன் போல நடந்துகொள்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின் கூட மக்களிடம் இப்படி கனெக்ட் ஆனது இல்லை. அதிமுக தலைவர்களின் பட்டை பெயர்களை சொல்லி அதை கண்டுபிடிக்கும்படி மக்களிடம் க்விஸ் போட்டி நடத்துவது, மக்களிடம் மைக் கொடுத்து பேச சொல்வது, சக வயது இளைஞர்களை வாடா, போடா என்று சொல்லி எளிதாக நெருக்கம் காட்டுவது, கேள்வி கேட்டு பதில் சொல்ல வைப்பது என்று உதயநிதி புதிய டெக்னீக்கை பயன்படுத்தி வருகிறார். இதனால் எளிதாக மக்கள் இவரிடம் நெருக்கம் காட்டுகிறார்கள்.

ஜெயலலிதா
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தில் செய்வீர்களா.. என்று சொல்லிவிட்டு ஒரு பாஸ் விட்டு பின் நீங்கள் செய்வீர்களா என்று கேட்பார். மக்களும் இதற்கு பதில் சொல்வார்கள். இதேபோல்தான் உதயநிதியும் மக்களோடு மக்களாக சேர்ந்து, அவர்களையும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வைத்து இயல்பாக பேசுகிறார்.

அக்கா
அதிலும் பெண்களை இவர் அக்கா என்று எளிமையாக அழைத்து , சகஜமாக பேச வைக்கிறார். போகிற இடங்களுக்கு எல்லாம் செங்கல் தூக்கி சென்று.. இதோ எய்ம்ஸ் மதுரை என்று கூறி விசில் வாங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதாலோ என்னவோ இணையத்தில் நடப்பதை அப்படியே பிரச்சார மேடையிலும் உடனுக்குடன் பிரதிபலித்து கிளாப்ஸ் அள்ளுகிறார் உதயநிதி.

திமுக
திமுகவின் மாபெரும் பேச்சாளார் படையைவிட உதயநிதிதான் இந்த முறை அதிகம் கவனம் ஈர்த்து இருக்கிறார். ஸ்டாலினை விட உதயநிதி சில சமூக வலைத்தளங்களில் அதிகம் கிளாப்ஸ் அள்ளுகிறார். இவரின் வயது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கட்சி நிர்வாகிகள் இவரை பார்த்து மலைத்து நின்றாலும்.. கட்சிக்குள் இவருக்கு பெரிய அளவில் எதிராக இல்லை என்றே நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிகின்றன.

நன்றாக பேசினார்
உதயநிதி நன்றாக பேசுகிறார்.. அதனால் கிளாப்ஸ் வாங்குகிறார். இதில் என்ன தவறு இருக்க முடியும். அவரை மக்களுக்கு பிடித்துள்ளது என்று கட்சி நிர்வாகிகளே உதயநிதியை பாராட்ட தொடங்கி உள்ளனர். இலக்கிய தமிழ் இனியும் எடுபடாது.. நட்பாக இயல்பாக பேசும் ஜென் இசட் தமிழ்தான் மக்களிடம் ரீச் ஆகும் என்பதை உதயநிதி பிரச்சாரம் உணர்த்தி உள்ளது.. கட்சிக்குள்ளும் இவரின் 3 வார கிராபை இந்த பிரச்சாரம் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications