’விக்ரம்’ சூப்பர்! படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகும்! உலகநாயகனை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்!
சென்னை : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் எனவும், உலகநாயகனுக்கு நன்றி, படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என திமுக எம்எல்ஏ நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
லோகேஷ் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பதை அதிக இடங்களில் பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கும் கமல் முன்பு நடித்த விக்ரம் படத்தின் பெயரை தான் வைத்திருக்கின்றனர்.

விக்ரம் கமல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான 2 நிமிடம் 39 நிமிடங்களுக்கு வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் கமல் ஹாசன், ஃபஹத், விஜய் சேதுபதி மூவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக "இந்த காட்ல அஸ்தமனத்தை பாக்கப்போறது யாருனு முடிவு பண்றது இயற்கை இல்ல நான் தான்" என வசனங்களில் மாஸ் காட்டியுள்ளனர் கமல்ஹாசனும்,லோகேஷ் கனகராஜும்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் டிக்கெட் புக்கிங் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் புரொமோஷன் பணிகளில் கமல் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு சேனல்களில் பேட்டி, ரசிகர்களை சந்திப்பது என பிசியாகவே இருக்கும் படத்தின் 'நாயகன்; கமல்ஹாசன்.

தற்போதே உற்சாகம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கும், நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் எப்போது படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும் விக்ரம் படத்துக்காக கடந்த வாரத்திலிருந்தே போஸ்டர்கள், பேனர்கள் என அதகளம் செய்து வருகின்றனர்.

உதயநிதி வாழ்த்து
இந்நிலையில், விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் எனவும், உலகநாயகனுக்கு நன்றி, படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என திமுக எம்எல்ஏ நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதநிதி," விக்ரம் படம் சூப்பர், நன்றி உலகநாயகன் கமல்ஹாசன் சார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்சேதுபதி, அனிருத், மற்றிம் படக்குழுவினருக்கு வாழ்த்துகள், படம்கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட்டாகும் என பதிவிட்டுள்ளார்.
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications