லண்டனில் ரெடியான லிஸ்ட்.. புதிய ரூட் எடுத்த உதயநிதி ஸ்டாலின்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கியமான லிஸ்ட் ஒன்றை எடுத்து வருகிறாராம்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் கட்சி தலைவர்கள் பலரும் வேறு வேறு இடங்களுக்கு ஓய்வு எடுக்க சென்றுள்ளனர். லோக்சபா தேர்தலின் 7 கட்டங்கள் முடியும் வரை அதாவது மே இறுதி வரை தேர்தல் விதிகள் அமலில் இருக்கும். இந்த கட்டத்தில் ஆட்சி தொடர்பான முடிவுகளை எடுக்க முடியாது.

மக்கள் நிர்வாகம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட முடியாது. நலத்திட்டங்களை தொடங்க முடியாது. இதனால் அரசு தரப்பில் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஓய்வு எடுக்க சென்றுள்ளனர்.
அமைச்சர்கள் வெளிநாடு பயணம்: அதன்படி முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் சென்றுள்ளார். குடும்பமாக 1 வாரம் ஓய்வு எடுக்க சென்றுள்ளார். பல்வேறு அமைச்சர்கள் ஊட்டி, கொடைக்கானல் சென்றுள்ளனர். சில அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு கூட சென்றுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளார். லண்டனில் அமைச்சர் ஸ்டாலின் ஓய்வு மட்டும் எடுக்காமல் கட்சி ரீதியான பணிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஊர் திரும்பியதும் திமுகவில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
1. அதன்படி லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம். அதேபோல் வேலை பார்க்காத இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம்.
2. நன்றாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை வைத்து அவர்களுக்கு ப்ரமோஷன் கொடுக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதன்படி புதிதாக இவர்களில் சிலரை மாவட்ட செயலாளர்களாக களமிறக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
3. அதேபோல் அமைச்சர்களாக பணியாற்றாதவர்கள், சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்கள் லிஸ்டையும் எடுத்துள்ளார். இந்த லிஸ்டை வைத்து அதிலும் சில மாற்றங்களை செய்ய உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் ப்ரோமோஷன்: உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி அமைச்சர் பதவியில் இருந்து துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு கொடுக்க ஸ்டாலின் திட்டங்களை வகுத்து வருகிறாராம்.
கடந்த லோக்சபா தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
பெரும்பாலும் ரிசல்ட் வந்ததும் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.
அமைச்சரவை மாற்றம்: இந்த நிலையில் திமுகவில் பின்வரும் மாற்றங்கள் தேர்தல் ரிசல்ட் வந்ததும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும்.
2. புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
3. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications