செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை மனைவி தேடும் கதை தெரியுமா? விஜய் விவாகரத்து வழக்கை தோண்டிய உதயநிதி
சென்னை: குட்டி கதை சொல்கிறேன் என்ற பெயரில் என் அப்பாவை தேடுவதை விடுங்க, செங்கல்பட்டு கோர்ட்டில் கணவரை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழகத்துக்கே தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உதயநிதி விமர்சித்துள்ளார். தமிழக சட்டசபையில் கொளத்தூரில் ஸ்டாலினின் தோல்வியை சுட்டிக்காட்டி விஜய் ஒரு குட்டி கதையை சொன்னார். விஜய் பேசுகையில், "எனக்கு ஒரு குட்டி கதை ஒன்னு ஞாபகம் வருது... சொல்லலாமா? ஒரு ஊர்ல ஒரு பெரியவரு, வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு சொல்லிட்டு கண்ணுக்கு மேல கை வச்சுக்கிட்டு இப்படி சுத்தி முத்தி தேடிட்டு இருந்தாராம். அப்ப கூட இருந்த ஒரு சின்ன பையன், 'என்ன தேடுறீங்க?' அப்படின்னு கேட்டானாம். அதுக்கு அந்த பெரியவர் சொன்னாராம், 'அது ஒன்னு இல்ல தம்பி, உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க... உங்க அப்பாவைக் காணோம்?'
இல்ல... எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா, சம்பந்தம் இல்லாத குட்டி கதை இதெல்லாம் எங்களுக்கும் பேசத் தெரியும்! அந்த கதையில பெரியவர் அப்படி கேட்டதை யாரும் தப்பா எடுத்துக்காதீங்க, அதனால யாரும் இங்க டென்ஷன் ஆக வேணாம். இவ்வாறு விஜய் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications