தந்தையை விஞ்சிய மகன்.. உதயநிதி 'மெகா' வெற்றி.. ஸ்டாலினே கணிக்காத 'செல்வாக்கு'
சென்னை: தந்தை மு.க.ஸ்டாலினை விட, அதிக வாக்குகளை பெற்று, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஹாஸம் காட்டியுள்ளார் மகன் உதயநிதி ஸ்டாலின்.
Recommended Video
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இன்று (மே.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் திமுக முன்னனிலை பெற்றுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார். அண்ணா, கலைஞரைத் தொடர்ந்து, திமுக சார்பில் தமிழக முதல்வராகிறார் ஸ்டாலின்.

சரிவில் அதிமுக
மாலை 6:30 மணி நிலவரப்படி, மொத்தம் 234 தொகுதிகளில், 159 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. 75 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் மதுரை தெற்கு தொகுதியில் முன்னணி பெற்றிருந்த நிலையில், தற்போது அவர் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

48,562 வாக்குகள்
இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். மொத்தமாக உதயநிதி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 81601. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 21076 வாக்குகளே பெற்றார்.

26, 764 வாக்குகள்
அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 12 சுற்றுகளின் முடிவில், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில், 39840 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 14674 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெறுகிறார். வாக்கு வித்தியாசம் 25166.

வித்தியாசமும் அதிகம்
வாக்கு சுற்று எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருந்தாலும், தந்தை ஸ்டாலினை விட, மிக அதிகமான வாக்குகளை பெற்று மகன் உதயநிதி வெற்றிப் பெற்றிருக்கிறார். அதேபோல், வாக்கு வித்தியாசத்திலும் ஸ்டாலினை விட பாதிக்கு பாதி அதிகமாக பெற்று பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications