இன்பநிதி மேற்படிப்பு, கால்பந்தாட்டம்.. குடும்பத்துடன் துபாய் புறப்பட்டுச் சென்ற உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் துபாய் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் துபாய் பயண பின்னணியில், அவரது மகன் இன்பநிதியின் மேற்படிப்பு விவகாரமும், கால் பந்தாட்ட போட்டி பற்றியும் 2 விதமான தகவல்கள் உலா வருகின்றன.
இதனிடையே பேரன் இன்பநிதியை வீட்டிலேயே வாழ்த்தி வழியனுப்பி வைத்துவிட்டு தான் இன்றைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டிருக்கிறார்.

ஸ்டாலின் பேரன்
முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி கால் பந்தாட்ட வீரராக திகழ்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் கால் பந்து போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். அண்மையில் கூட ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று திரும்பினார். கால் பந்து விளையாட்டு மீது அதீத ஆர்வம் கொண்ட இன்பநிதி சென்னையிலும் தொடர்ந்து பிராக்டீஸ் செய்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் இன்று காலை உதயநிதி ஸ்டாலின் தனது மகன் இன்பநிதி மற்றும் மனைவி கிருத்திகா உட்பட குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து துபாய் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இதன் பின்னணியில் துபாயில் இன்பநிதி மேற்படிப்பு படிக்கவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இதன் காரணமாகவே உதயநிதியும் உடன் சென்றிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றன. இதனிடையே இது தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் தீவிரமாக இயங்கி வரக்கூடிய ஒரு சிலரிடம் நாம் விசாரித்தோம்.

இன்பநிதி
அவர்கள் கூறுகையில், இன்பா நிச்சயம் கால் பந்தாட்ட போட்டியில் பங்கேற்க தான் வெளிநாடு சென்றிருப்பார் என தங்களுக்கு தெரிந்த தகவலை கூறினர். துபாயில் மேற்படிப்புக்கு வாய்ப்பில்லை, கால் பந்தாட்டம் போட்டி தொடர்பாகத் தான் அவரது இந்தப் பயணம் அமைந்திருக்கும் எனத் தெரிவித்தனர். இன்பநிதியை வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைப்பதற்காக அவரது நண்பர்கள் பட்டாளம் சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா வாய்ப்பு
தற்போது விளையாட்டுத் துறை மீது ஆர்வம் கொண்டுள்ள இன்பநிதி எதிர்காலத்தில் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்பத் தான் அவரும் உடற்பயிற்சிகள் மூலம் தனது உடற்கட்டமைப்பை வலிமைப்படுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications