இன்று மாற்றி அமைக்கப்படும் தமிழக அமைச்சரவை? துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றப்பட உள்ளதாகவும் பல அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று தமிழக அமைச்சரவையில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த அமைச்சரவை மாற்றத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றே தெரிகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மகனும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களிலும் இது தொடர்பாகப் பலரும் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்த போதிலும், அப்போது இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. இதற்கிடையே இப்போது அது நடக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது.
முதல்வர் வெளிநாடு பயணம்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். ஏற்கனவே ஐக்கிய அமீரகம், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து இருக்கிறார். அடுத்த கட்டமாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். முதலில் இம்மாதம் 22ம் தேதி அவர் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டத்தை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த மாதம் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 22ம் தேதி முதல்வரின் அமெரிக்கா பயணம் அமையலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அதற்கு முன்பாக அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றைய தினம் ஜூலை 19ம் தேதியே இந்த மாற்றம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்: இதில் பல முக்கிய அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமைச்சரவையில் இருக்கும் பலர் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை இருக்கும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய அமைச்சரவை மாற்றத்தை முதல்வர் ஸ்டாலின் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், போக்குவரத்துத் துறை, மின்சார துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் மாற்றங்கள் வரலாம் எனச் சொல்லப்படுகிறது.
இந்த அமைச்சரவையில் மேலும் சில புதிய முகங்களுக்கும் வாய்ப்பு தரப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக சில இளம் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. திமுக ஆட்சி மீது சமீப காலமாக சில விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதை மனதில் வைத்தும் இந்த மாற்றம் இருக்கலாம் என்றும் 6 அமைச்சர்கள் மீது புகார் இருப்பதால் அவர்கள் மாற்றப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
துணை முதல்வர் பதவி: எல்லாவற்றையும் விட தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை திமுக நிர்வாகிகள் இடையே தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், அதற்கு இந்த முறை முதல்வர் செவி சாய்ப்பார் என்றே தெரிகிறது. முதல்வரின் வேலைப் பளுவைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் நிலையில், அதையும் மனதில் வைத்தே இந்த அமைச்சரவை மாற்றம் + உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி தருவது நடக்கிறது. இன்று இந்த மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications