டிகேஎஸ் இளங்கோவன் சொல்வதை பார்த்தால்.. உதயநிதி ஸ்டாலினுக்கு.. ஆஹா.. திமுகவில்!
Recommended Video
சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என பல்வேறு மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து விளக்கம் அளித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் டி கே எஸ் இளங்கோவன், உதயநிதிக்கு கட்சி பொறுப்பு அளிப்பது குறித்து திமுக தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வந்த உதயநிதி ஸ்டாலின், கட்சி பணிகளில் ஒதுங்கியே இருந்து வந்தார். ஆனால் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து முழுமையாக கட்சி பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் உதய நிதி ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக திமுக உடன் பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர். திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் கட்சிக்காக அதிமாக உழைத்து உள்ளதால் அவருக்கு திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டும் என திமுக உடன்பிறப்புகள் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இது தொடர்பாக பல்வேறு மாவட்ட செயலாளர்களும் திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் எடுத்த எடுப்பிலேயே மிகப்பெரிய பொறுப்பினை உதயநிதிக்கு கொடுத்தால் குடும்ப அரசியல் என விமர்சனம் வரும் என திமுகவின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்களாம். இதனால் ஸ்டாலின் முதல்வரான பிறகு கட்சி பதவிக்கு வர உயநிதிக்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
இந்நிலையில் உதயநிதிக்கு கட்சி பொறுப்பு அளிக்கப்படுமா என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் டி கே எஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அவருக்கு திமுகவில் பொறுப்பு வழங்குவது தொடர்பாக கட்சி தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதேநேரம் வரும் காலங்களில் பொறுப்புகளை கொடுப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றார். டிகேஎஸ் இளங்கோவன் சொல்வதை பார்த்தால் நிச்சயம் உதயநிதிக்கும் இளைஞரணியில் முக்கிய பொறுப்பு உறுதி என தெரிகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications