அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 3வது முறையாக புழல் சிறையில் சந்தித்த உதயநிதி.. நாளை ஜாமீன் மனு விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 3-வது முறையாக இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Udhayanidhi Stalin Meets Anbil Mahesh Poyyamozhi

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ், நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புழல் சிறையில் உள்ள அவரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது முறையாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி ஆகியோரும் உடனிருந்தனர்.

ஏற்கெனவே 2 முறை அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சிறையில் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேஷை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

மேலும், கடந்த வாரம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, போலீஸ் தரப்பின் கடும் எதிர்ப்பால் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்பில் மகேஷ் தரப்பில் ஜாமீன் கோரிய மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க போலீசார் அவகாசம் கோரிய நிலையில் நாளை சென்னை ஐகோர்ட்டில் அந்த மனு விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+