அசத்தல்.. விஜயகாந்த்தை வீட்டுக்கே போய் சந்தித்து நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து அவரது உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தது தேமுதிக. அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் டெபாசிட் இழந்தார்.

அதேநேரம், உடல்நிலை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையை தாண்டி எங்கும் பிரச்சார கூட்டத்திற்கு செல்ல முடியவில்லை.

இந்த நிலையில்தான் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு இன்று மதியம் உதயநிதி ஸ்டாலின் சென்றார். விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தி பிறகு அவருடைய உடல்நிலை பற்றி கேட்டறிந்தார் உதயநிதி ஸ்டாலின்.

அவரிடம் வாழ்த்து பெற்றார். இதற்கு முந்தைய காலகட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விஜயகாந்தை சந்திப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களையும் அடுத்தடுத்து உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications