Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”கழகத் தலைவன்” ஆகும் உதயநிதி ஸ்டாலின்.. திமுகவில் அல்ல - அங்கதான் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்து இருக்கும் திரைப்படத்துக்கு "கழகத் தலைவன்" என பெயரிட உள்ளதாக தகவல் வெளியாகி திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Recommended Video

    Udhayanidhi Stalin | கழகத் தலைவன்... திமுக-வில் அல்ல *Kollywood | Filmibeat Tamil

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர், தற்போது ஏராளமான திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்.

    நெஞ்சுக்கு நீதி

    நெஞ்சுக்கு நீதி

    தொடக்கத்தில் திரைப்படங்களை மட்டும் தயாரித்து வந்த உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் கொடுத்தார். அந்த திரைப்படம் வெற்றியடையவே, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    மாமன்னன் திரைப்படம்

    மாமன்னன் திரைப்படம்

    இதன் தொடர்ச்சியாக மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இதன் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து படக்குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினார். அடுத்தடுத்து 2 வெற்றிப் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

    மகிழ் திருமேனி திரைப்படம்

    மகிழ் திருமேனி திரைப்படம்

    இந்த திரைப்படத்துக்கு முன்பாக அருண் விஜயை வைத்து "தடம்" என்ற வெற்றிப்படத்தை இயக்கிய மகிழ் திருமேனியின் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அந்த படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கழகத் தலைவன்

    கழகத் தலைவன்

    இந்த நிலையில், இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் டைட்டிலை அடுத்த வாரம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே திரைப்படத்தின் பெயர் வெளியில் கசிந்துள்ளது. இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பிரபல சினிமா செய்தியாளர் பிஸ்மி பேசுகையில், திரைப்படத்துக்கு "கழகத் தலைவன்" என்ற பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். திமுகவின் அடுத்த தலைவர், அடுத்த அமைச்சர், வருங்கால முதலமைச்சர் என அக்கட்சியினர் தெரிவித்து வரும் சூழலில் இது திரையுலகம் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+