கண்ட்ரோல் இல்லாமல் போயிடும்..கட்சி நம்ம கையில இருக்கனும்! அப்பாவிடம் ஸ்ட்ரெய்ட்டாக சொன்ன உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு திமுகவை மறுசீரமைக்கும் பணி பரபரப்பாக திரைமறைவில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்களின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட இருக்கிறது அதே நேரத்தில் தேர்தல் நடத்தி மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்யலாம் என திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. குறிப்பாக திமுவினர். அடுத்தடுத்து 2 முறை ஆட்சியை திமுக அமைத்ததில்லை என்ற செண்டிமெண்ட் இந்த தேர்தலில் தொடர்ந்திருக்கிறது.

Udhayanidhi Stalin DMK mk Stalin

ஆனால், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததை அந்த கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் பதினைந்துக்கும் மேற்பட்ட பலம் பொருந்திய அமைச்சர்களும் படுதோல்வியை சந்தித்தனர்.

திமுக மறுசீரமைப்பு

இதை அடுத்து தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய முடிவு செய்த திமுக தலைமை கள ஆய்வு குழுக்களை அமைத்தது. தொடர்ந்து மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் அந்த குழு ஆய்வு மேற்கொண்டது. கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், அடிமட்ட தொண்டர்கள் என பல தரப்பினரை நேரில் சந்தித்து கருத்துக்களை சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு திமுக தலைவர் ஸ்டாலினிடம் அந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.

முக ஸ்டாலின்

இந்த அறிக்கையில் நீண்ட காலமாக கட்சிக்குள் இருந்த அதிருப்தி, நிர்வாக குறைபாடுக,ள் தொகுதி பிரச்சனைகள், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தனது பண்ணை வீட்டிலும் வீட்டிலும் இந்த அறிக்கையை விரிவாக ஆய்வு செய்த முக ஸ்டாலின், இது தொடர்பாக நிர்வாகிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.

அண்ணா அறிவாலயம்

அது மட்டும் அல்லாமல் திமுகவை மறுசீரமைப்பு செய்ய தங்கம் தென்னரசு, கீதாஜீவன், சக்கரபாணி, சிவசங்கர், தமிழரசி, அப்துல்லா, பரந்தாமன், எழிலன், முரசொலி, கருணா ஆகியோர் இடம்பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம், மாவட்டங்களை இன்னும் அதிகமாக பிரிக்க வேண்டும் என சொன்னார்களாம்.

திமுக மாவட்ட செயலாளர்கள்

இதை அடுத்து அந்த மறுசீரமைப்பின் முக்கிய அம்சமாக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமனம் செய்ய திட்டமிட்டிருந்தார் ஸ்டாலின். தற்போது பெரும்பாலும் திமுகவில் ஒரு மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். பல மா.செ.கள் குறுநில மன்னர்களாகவே முன்னாள் அமைச்சர்கள் வலம் வந்த நிலையில், அவர்கள் அதிகாரத்தை குறைக்கும் பொருட்டு இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என தமிழக முழுவதும் 115 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

திமுக செயற்குழு கூட்டம்

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் லண்டன் பயணத்தால் இந்த மறுசீரமைப்பு தள்ளிப்போனது. தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் திரும்பி இருக்கும் நிலையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு, மாவட்டங்கள் பிரிப்பது, பட்டியல் இனத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் புதிதாக பிரிக்கப்படும் மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்வதற்கு பதிலாக தேர்தல் நடத்தினால் புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ஒரு தரப்பு கூறி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்

இதனை தீவிரமாக ஆலோசனை செய்த திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கு ஒப்புதல் அளித்ததாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தல் வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் சொல்லி வருகிறாராம். தேர்தல் நடத்தினால் தேவையில்லாமல் பிரச்சனை வரும், கோஷ்டி பூசல் ஏற்படும், மேலும் திமுக தலைமை மீதான பயம் இல்லாமல் போய்விடும் என பல கருத்துக்களை முன்வைத்துள்ளாராம் உதயநிதி.

திமுக சீனியர்கள்

மேலும் செயற்குழு கூட்டத்திலும் இது தொடர்பாக விரிவாக எடுத்துப் பேச இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் உதயநிதியின் முடிவு தான் சரி.. தேர்தல் நடத்தினால் தேவையில்லாமல் பிரச்சனை வரும் என திமுக சீனியர்களும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் சொல்லி வருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+