திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள்! உதயநிதி ஸ்டாலின் போட்ட கட்டளை! ஆள்பிடிக்கும் நிர்வாகிகள்!
சென்னை: திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் படலத்தை மீண்டும் தீவிரப்படுத்தக் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
18 வயது முதல் 35 வயது வரையிலான நபர்களை புதிய உறுப்பினர்களாக இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ள உதயநிதி ஸ்டாலின், எண்ணிக்கையை உயர்த்துவதற்காக யாரும் போலியாக கணக்கு காட்ட வேண்டாம் என சற்று கறார் காட்டியிருக்கிறார்.
திமுக இளைஞரணி 43-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அந்த அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

திமுக இளைஞரணி
திமுக இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் நிறைவடைந்து 43-வது ஆண்டில் பயணித்து வருகிறது. இந்நிலையில் இளைஞரணியை இன்னும் அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும் வலிமைப்படுத்துவது தொடர்பாகவும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் உதயநிதி ஸ்டாலின். அதில், இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை திமுக இளைஞரணியில் இணைக்க தீவிர நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கடந்த முறை
கடந்த முறை நடைபெற்ற உறுப்பினர் சேர்ப்பு படலத்தின் போது சில நிர்வாகிகள் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவதற்காக போலி உறுப்பினர் சேர்ப்பில் ஈடுப்பட்ட விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். குறிப்பிட்டு யார் பெயரையும் உதயநிதி சொல்லாவிட்டாலும் கூட அதில் தொடர்புடைய இளைஞரணி அமைப்பாளர்கள் கரெக்டாக கண்டுபிடித்துவிட்டாரே என சற்று அதிர்ச்சி அடைந்தனராம். மொத்தத்தில் தன்னை யாரும் ஏமாற்ற முடியாது என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.

பயிற்சிப் பாசறை
இதேபோல் மாவட்டம் தோறும், தொகுதி தோறும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படுவதை வரவேற்றுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், கிளைக் கழக அளவிலும் இதனை நடத்துமாறு கேட்டுக்கொண்டாராம். இளைஞரணி நிர்வாகிகள் எப்போதும் ஆக்டிவாக இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்பும் உதயநிதி ஸ்டாலின் அதற்கேற்ப அசைன்மெண்ட்களை அடுத்தடுத்து கொடுக்கப் போகிறார்.

உறுப்பினர் சேர்ப்பு
திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ள அந்த அணியின் மாவட்ட நிர்வாகிகள், தங்களுக்கு கீழ் உள்ள நகர, வட்ட, ஒன்றிய அமைப்பாளர்களை அழைத்து அதற்கான பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.
-
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications