ரேசன் அரிசியை பாலிஷ் போட்டு.. தவெக எம்எல்ஏவை விரட்டிய மக்கள்! இது தான் மாற்றமா? உதயநிதி அட்டாக்!
சென்னை: ரூ.30 விலையில் தமிழக அரசின் சன்னரக அரிசி விற்பனை தொடங்கி இருக்கும் நிலையில், அரிசி தரமாக இல்லையெனக் கூறி திருப்பிக் கொடுத்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில், மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா? தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சன்னரக அரிசி விலை உயர்ந்திருப்பது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதை அடுத்து ஏழை எளிய மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்தது. அதன்படி தமிழக அரசின் கூட்டுறவுத் துறை மூலம் நியாய விலை கடைகளில் 30 ரூபாய்க்கு ஒரு கிலோ சின்ன ரக அரிசி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த திட்டங்களை அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தொடங்கி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக அரசின் சட்ட ரக அரிசி விற்பனையை கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார். அப்போது அரிசி தரமாக இல்லை எனக் கூறி பொதுமக்கள் திருப்பிக் கொடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே நிலையில் தமிழக அரசின் இலவச அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்பதாய் என கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது. அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர்.
கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA. தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.
ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
