“காங்கிரஸை சேர்க்காதீங்கணா” என குரல் எழுப்பிய தொண்டர்.. உடனே உதயநிதி கொடுத்த ரியாக்‌ஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தின்போது, "காங்கிரஸை சேர்க்காதீங்கணா" என்று தொண்டர் ஒருவர் குரல் எழுப்பிய நிலையில் உதயநிதி கொடுத்த ரியாக்‌ஷன் கவனம் பெற்றுள்ளது.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

Udhayanidhi Stalin Reacts After DMK Cadre Says Don t Include Congress

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி கேட்பார்கள். மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்று சொல்வார்கள். அதற்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் எல்லோரும் பதில் சொல்வார்கள்.

அப்படி பதில் சொன்னால் எதிர் கேள்வி கேட்கலாம். பேச்சுக்குப் பேச்சாக இருக்கும். பாட்டு பாடினால் நாங்கள் என்ன செய்வது? பிக் பாஸ் போட்டிக்கு நிகராக சட்டமன்றத்தை எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சட்டசபையின் மாண்பை இன்றைய ஆளுங்கட்சியினர் கெடுத்துவிட்டார்கள்.

துறைசார்ந்த எந்தக் கேள்விக்கும் அமைச்சர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். சபாநாயகர் பொதுவாக எதிர்க்கட்சியினரை அதிகமாகக் குறைசொல்வார்கள். ஆனால் இந்த முறை ஆளுங்கட்சி அமைச்சர்கள் தவறாகப் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் அதிகமாக நீக்கி இருக்கிறார். இந்தச் சாதனை இந்த அரசுக்கு உண்டு" என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி, "சிலர் இரவோடு இரவாக கூட்டணியில் இருந்து திருட்டுத்தனமாகப் போய்விட்டார்கள். அவர்களின் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் இவர்கள் ஸ்ட்ரைட்டாக பிரதமர் வேட்பாளர் என போய்விட்டார்கள்." என்றார்.

இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது திமுக இளைஞரணின் நிர்வாகி ஒருவர் "காங்கிரஸை சேர்க்காதீங்கணா" என்று குரல் எழுப்பினார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், "திருப்பி சேர்த்தா நீங்க விட்டிருவீங்களா?" என சிரித்தபடியே கேட்டார். உதயநிதியின் இந்த ரியாக்‌ஷன் கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+