திமுக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை உண்மையா? உதயநிதி கொடுத்த ரியாக்சன்! கிளம்பிய யூகங்கள்
சென்னை: தமிழகத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கிடையே தான் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதுபற்றி உதயநிதி ஸ்டாலினிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ரியாக்சன் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
சென்னையில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தை முடித்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள், ''திமுக - அதிமுக கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்கிறார்களா.. உண்மையா? என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு உதயநிதி ஸ்டாலின் எந்த பதிலையும் அளிக்கவில்லை. மாறாக சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
ஆனாலும் பத்திரிகையாளர்கள் விடவில்லை. அடுத்தடுத்து கேள்விகள் கேட்டனர். ''மவுனம் சம்மதத்துக்கான அடையாளம் என எடுத்து கொள்ளலாமா? என்றும், ''இந்த கேள்வியை திமுக தவிப்பதற்கான கரணம் என்ன?. திமுக - அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக எடுத்து கொள்ளலாமா?'' என்று கேள்விகளை எழுப்பினர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் அந்த கேள்விகள் எதற்கும் பதிலளிக்கவில்லை. கூட்டத்துக்கு நடுவே நடந்து சென்று காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
உதயநிதியின் இந்த செயல் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. திமுக - அதிமுக இடையே கூட்டணி வைக்கும் முடிவு இல்லாவிட்டால் இல்லை என்று சொல்லி சென்றிருக்கலாம். இல்லாவிட்டால் பொறுத்திருங்கள் என்று கூறியிருக்கலாம். ஆனால் அவர் எந்த பதிலையும் அளிக்காமல் சிரித்தபடி மவுனமாக சென்று இருப்பது திமுக - அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதா? இருகட்சிகளின் தலைமையும் திமுக - அதிமுக கூட்டணியை விரும்புகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
-
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications