'சனாதன ஒழிப்பு' உதயநிதி ஸ்டாலின் பேச்சு- இந்தியா கூட்டணிக்குள் கோள்மூட்டும் பாஜக- காங். கண்டனம்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனத்தை ஒழிப்போம் என முழக்கம் நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில் காங்கிரஸும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மனித குலத்துக்கு விரோதமான சனாதன தர்மத்தை ஒழித்தாக வேண்டும்; சனாதன தர்மத்தை எதிர்ப்பது மட்டுமல்ல ஒழிப்பதும் அவசியம் என
சென்னை மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய தூண்டும் பேச்சு என திரித்து கூறுகின்றனர் பாஜக தலைவர்கள்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தியா" கூட்டணியின் தூணாக இருக்கிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்த்துப் பேசுகிறார். இத விவகாரத்தில் காங்கிரஸும் "இந்தியா" கூட்டணி கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை விளக்க வேண்டும். இத்தகைய பேச்சுகள் துரதிருஷ்டவசமானது. இத்தகைய பேச்சு கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
உதயநிதி பேச்சு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி பேசுகையில், இந்த நாடு அனைத்து மதத்துக்கும் மரியாதை கொடுக்கிறது. நமது அரசியல் சாசனம் மதச்சார்பற்றது. இந்த நாட்டில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக பாஜகதான் மதத்தை அரசியலாக்கி வருகிறது. மதம் குறித்த அத்தனை விமர்சனங்களுக்கும் பாஜகவின் இந்தப் போக்குதான் காரணம். சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு தவறானது. ஆனால் இதற்கு காரணம் மதத்தை பாஜக அரசியலாக்கியதுதான் என்றார்.

-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications