யோவ் உனக்கு ரசிகர்லாம் இருக்கா...கிண்டல் கேள்விக்கு உதயநிதி சொன்ன பதிலை பாருங்க
சென்னை: உங்களுக்கு ரசிகர்கள் எல்லாம் இருக்காங்களா என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதிலை பார்த்தால் அசந்துவிடுவீர்கள்.
கஜா புயல் திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டசா மாவட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த புயல் சீற்றத்தால் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. விவசாய பாயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
|
உதயநிதி
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர தமிழ் திரையுலகினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் நிவாரண பொருட்களையும் உதவிகளையும் வழங்கி வருகின்றனர். தனது நற்பணி மன்றத்தில் செய்யும் உதவிகளை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.
|
தயாராக இருக்கும் நண்பர்கள்
தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், "உனக்கு ரசிகர்கள் எல்லாம் இருக்கா?" என்று உதயநிதியிடம் ட்விட்டரில் ஒருவர் கிண்டலாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு உதயநிதி பதிலளிக்கையில், ரசிகர்கள் எல்லாம் இல்ல நண்பா, நற்பணி செய்ய எப்போதும் தயாராக இருக்கும் நண்பர்கள் என்று பதில் அளித்துள்ளார்.

ஆளும் கட்சி பேனர்
எதிர்க்கட்சியினர் பேனர் வைப்பது குறித்து அறப்போர் இயக்கம் டுவிட்டரில் குற்றம்சாட்டியது. அதில் எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும் கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் ஆயிரம் பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு டிவிட்டரில் குற்றம்சாட்டியிருந்தது. மேலும், ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என்று அந்த இயக்கம் தெரிவித்திருந்த நிலையில், இதுபோன்ற தவறு நடக்காது என உதயநிதி ஸ்டாலின் ரிடிவிட் செய்திருந்தார்.
|
மீண்டும் நடக்காது
ஒரு முறை திமுக பொதுக் குழு உறுப்பினர் கூட்டத்தின் போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் உதயநிதியின் படம் இடம் பெற்றிருந்தது. அப்போது முன்னணி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம் பெற உங்க தகுதி என்ன? என கேட்டிருந்தபோது அதற்கு உதயநிதியோ தவறு... மீண்டும் நடக்காது என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications