ஒரே போட்டோ.. குளோஸ்..அயோத்தி விழாவுக்கு மத்தியில் தன்னை சீண்டிய பாஜகவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
சென்னை: தன்னை விமர்சித்து பதிவிட்ட பாஜகவிற்கு, கிண்டலாக டிஷர்ட் படம் போட்டு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நீண்டகாலமாக களமாடி வருகிறது. பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, பல தருணங்களில், பல்வேறு விவகாரங்களில் இந்தி திணிப்பு முயற்சியை திமுக எதிர்த்து வருகிறது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராக “இந்தி தெரியாது போடா” என்ற திமுகவின் பதிலடி பிரச்சாரம் பரவலாக எழுந்தது. உதயநிதி ஸ்டாலினும், “இந்தி தெரியாது போடா” என பாஜகவினருக்கு பதில் அளித்திருந்தார்.

தமுஎகச சார்பில் சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனப் பேசி இருந்தார். அதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், தன் கருத்தில் இருந்து சற்றும் பின்வாங்காமால் உறுதியாக நின்றார் உதயநிதி.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக பாஜகவினர் கருத்துகளைக் கூறி வருகின்றனர். பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்று புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது. அந்தப் பதிவு இந்தியில் இடம்பெற்றிருந்தது.
அதில், “இந்த அநியாயக்காரர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்!
இவர்கள் ராமர் கோவிலை வெறுக்கிறார்கள். சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள்.” என உதயநிதி ஸ்டாலின், அயோத்தி ராமர் கோவில் படங்களோடு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவை பாஜகவினர் பலரும் பகிருந்து உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தனர்.
அந்தப் பதிவு உதயநிதி ஸ்டாலின் பார்வைக்கு வந்த நிலையில், கிண்டலாக ஒரு ரிப்ளை போட்டுள்ளார் உதயநிதி. "இந்தி தெரியாது போடா" என்ற வாசகம் பொறித்த டிஷர்ட் அணிந்த தனது புகைப்படத்தை பாஜகவின் பதிவுக்கு ரிப்ளையாக போட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா?











Click it and Unblock the Notifications