லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்றாரே.. அதிமுக பாஜக கூட்டணி முறிவு? ‘சுளீர்’ ரிப்ளை கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இனி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பிரஸ்மீட்டில் எழுந்த கேள்விக்கு பட்டென பதில் கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வந்தாலும், டெல்லி பாஜக தலைமை தலையிட்டு இந்தக் கூட்டணியை முறியாமல் பார்த்துக் கொண்டது. ஆனால், அண்ணாமலை அதிமுகவை சீண்டுவதை தொடர்ந்து வந்தார். திமுகவின் ஊழல் பட்டியலை போல அதிமுகவின் ஊழல் பட்டியல் வெளியாகும் எனக் கூறி அதிமுக தலைவர்களை மிரள வைத்தார்.

பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை 'ஊழல் குற்றவாளி' என்று கூறி அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் தான், அண்ணாவை பற்றி பேசி அதிமுகவை மீண்டும் சீண்டியுள்ளார் அண்ணாமலை. மதுரை தமிழ் மாநாட்டில் முத்துராமலிங்க தேவரிடம் மன்னிப்பு கேட்டு ஓடி வந்தவர் அண்ணாதுரை எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் அண்ணாமலை.
அதிமுக மூத்த தலைவர்களான செல்லூர் ராஜு, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அண்ணாமலைக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினர். ஆனாலும், அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல், அண்ணா பற்றி தான் பேசியது சரிதான் என்று கூறி அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் சரமாரியாக விளாசினார். இந்நிலையில் தான் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என இன்று அதிரடியாக அறிவித்துள்ளார் அதிமுகவின் ஜெயக்குமார்.
மேலும், அதிமுக என்ற சிங்கக் கூட்டத்தை சிறு நரியான அண்ணாமலை தொடர்ந்து சீண்டி வந்தார். அதனால் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, பாஜகவை எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற்றுகிறோம். தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை. இதுவரை பாஜக என்கிற வேஸ்ட் லக்கேஜை தூக்கி திரிந்தோம். இன்று தூக்கியெறிந்து விட்டோம் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஜெயக்குமார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு அரசியல் அரங்கில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. பாஜகவினர் ஜெயக்குமார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விசிக தலைவர் திருமாவளவன், அதிமுகவின் முடிவை வரவேற்றுள்ளார். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அது உட்கட்சி பிரச்சனை.. அதில் நாம் தலையிடக்கூடாது" என சிரித்தபடி பட்டென கூறினார் உதயநிதி ஸ்டாலின். அதிமுகவை டெல்லியில் இருந்து பாஜக தான் இயக்குகிறது என விமர்சித்து வரும் உதயநிதி, பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்குவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அறிவித்திருக்கும் சூழலிலும் இந்த முடிவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications