ஓடி வருகிறார் உதய(சூரியன்)நிதி..பாட்டில் பட்டைய கிளப்பிய உ.பி.கள்! இந்த கிஃப்ட் தான் வேண்டுமாம்!
சென்னை: நவம்பர் 27ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி இன்று (25.11.26) சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 'வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்' என்ற பாடல் வெளியிடப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தனக்கு பிறந்தநாள் பரிசாக என்ன வேண்டும் என்பது குறித்து கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
திமுகவின் நான்காம் தலைமுறை அரசியல்வாதியாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தாத்தா கருணாநிதி, அப்பா ஸ்டாலின் என முதல்வர் பதவிகளை அலங்கரித்த, நிலை தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருக்கிறார். மேலும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகவும் இருக்கிறார்.
வரும் நவம்பர் 27ஆம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி திமுகவினர் தற்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின்
அதில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பாடல் வெளியிடப்பட்டது. இளம் தலைவர் வருகிறார் என்ற அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது பிறந்த நாளையொட்டி தனக்கு என்ன பரிசு வேண்டும் என்பது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதில்," எனது 49-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் கழக உடன்பிறப்புகள், இளைஞர் அணி தோழர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருவதை அறிந்தேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் பிறந்தநாள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு நாளாகும். ஆனால், பகட்டான கொண்டாட்டங்களை நான் ஒருபோதும் விரும்புவது இல்லை. கொள்கைப் பணியும், மக்கள் பணியும் இணைந்த பிணைப்பாக பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருக்குமானால், அதுவே எனக்கு மனநிறைவு தரும்.
திமுக இளைஞரணி
அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழை-எளியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு இளைஞர் அணி தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிகளை, திராவிட மாடல் அரசின் சாதனைகள், நம் இயக்கக் கொள்கைகள் ஆகியவற்றை மக்களிடையே கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு, சிறிய அளவில் திட்டமிட்டால் கூடுதல் மகிழ்ச்சி.
பிறந்தநாள் பரிசு
இதில், தலைமைக் கழகப் பேச்சாளர்கள்- இளைஞர் அணி கண்டறிந்து தலைமை வசம் ஒப்படைத்துள்ள 200-க்கும் அதிகமான இளம் பேச்சாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவரும் சூழலில், எங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் இளைஞர் அணி தோழர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள். பொதுமக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் எஸ்.ஐ.ஆர். (S.I.R) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனும் பெயரிலான அநியாயத்தை எதிர்த்து, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் கழகம் சட்டப்போராட்டம் நடத்திவருகிறது. அதேவேளை, வாக்காளர் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கும் பணிகளில் பொதுமக்களுக்கு உதவியும் வருகிறது.
உதயசூரியன்
இந்தப் பணியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழக நிர்வாகிகளுடன் இளைஞர் அணி தோழர்களும் இணைந்து பணியாற்றுவதைக் கடமையாகக் கருத வேண்டும். சர்வாதிகார மேகம் நம் நாட்டை வேகமாகச் சூழ்ந்துவரும் நிலையில், அந்த மேகக் கூட்டத்தை 'உதயசூரியன்' தான் கலைக்கும் என்பது நாடு முழுவதும் உள்ள மக்களின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், நம் பணிகள் அமைந்திட வேண்டும்.
பிறந்தநாள் விழா
என்னை குறிஞ்சி இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்கூற வரும் என் அன்புக்குரியவர்கள் பொன்னாடைகள், சால்வைகள், பரிசுகள், பூங்கொத்துகள் போன்றவற்றை தவிர்த்து, புத்தகங்கள், கருப்பு-சிவப்பு வேட்டிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்களைக் கொடுத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். எனது அடுத்த பிறந்தநாளிலும் நம் கழகத் தலைவர் அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தொடர்வார், திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்ற வெற்றிச் செய்தியை உறுதி செய்யும் வகையில், நீங்கள் பணியாற்றுவதே நான் உங்களிடம் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு." என கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications