உதயமும் வரும்.. உதயநிதியும் வருவார்! இனி அவர் தான் எதிர்காலம்! அழுத்தமாகச் சொன்ன அறிவாலயம்!
சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் என்பது ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக இல்லாது, திமுக தலைமையின் எதிர்காலத்திற்கு கொடுத்த மிகத் தெளிவான சைகை என்றே சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கட்சிக்குள் உள்ளவர்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும், "திமுக-வின் அடுத்த தலைமை உதயநிதிதான்" என்ற செய்தியை ஸ்டாலின் இந்த ஆண்டு மிகத் துல்லியமாகப் பதித்துவிட்டார் என்கின்றனர் திமுக சீனியர்கள்.
உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளைச் சுற்றி தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. இளைய அரசருக்கு முடிசூட்டு விழா போல் கொண்டாடுகிறார்கள் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கும் நிலையில்,, திமுக-வின் அணுகுமுறையோ வேறு மாதிரி இருக்கிறது.
உண்மையைச் சொல்லப்போனா கட்சியின் உள்ளேயும், கூட்டணிக் கட்சிகளிடமும், திமுக-வின் அடுத்த தலைவரும், எதிர்கால முதலவரும் உதயநிதிதான் என்பதை இந்த ஆண்டின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி விட்டதாகவே சொல்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
இந்த ஆண்டில் உதயநிதி பிறந்த நாளுக்காக பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் குவிந்த வாழ்த்து விளம்பரங்கள் சாதாரண அரசியல் விளம்பரங்களல்ல. அவற்றில் பெரும்பாலானவை "திமுகவின் எதிர்காலம்", "அடுத்த தலைமுறை தலைவர்", "முதல்வர் வேட்பாளர் உதயநிதி" என்ற வாசகங்களைக் கொண்டிருந்தன. இதனால், வாழ்த்து என்ற பெயரில் புதிய அரசியல் சிக்னலை திமுகத் தலைமை திறம்பட வெளிப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
திமுக அடுத்த தலைமுறை
திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தலைமை, உதயநிதியை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவதில் கவனமாகவும், கட்சிக்குள் யாருக்கும் பிணக்கு ஏற்படாத வகையிலும் நடந்து கொண்டது. விளையாட்டு உதயநிதி. கட்சியின் மாவட்ட ஆய்வுக்கூட்டங்களை நடத்த அதிகாரம் கொடுக்கப்பட்டதும், துணை அமைப்புகளில் விசுவாசிகளுக்கான இடங்கள் அதிகரித்ததும் இதற்குச் சான்று.
அடுத்த தலைவர்
2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி இன்னுமே சில நடவடிக்கைகள் உறுதியாக உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "உதயநிதிக்கு ஏற்றவர்களை" அதிக தொகுதிகளில் போட்டியிட்டுப் பின்னர் கட்சியையும் ஆட்சியையும் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப் போகிறார்கள் என்ற பேசுபொருள் தற்போது திமுகவுக்குள்ளும் கூட்டணிக் கட்சிகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
தலைமை மாற்றம்
இன்னும் தெளிவாகச் சொன்னவர்கள் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். "உதயநிதி இன்றைக்கு ஸ்டாலினைவிட சிறப்பாக செயல்படுகிறார்" என்று அவர் சென்னையில் நடந்த திமுக அறிவுத் திருவிழா மேடையில் பாராட்டினார். அதையும் தாண்டி, "ஒருநாள் அவர் ராஜேந்திர சோழனாக உயர்வார்" என்று நேராகச் சொல்லியதும், திமுக எந்தத் திசையில் செல்கிறது என்பதை மேலும் தெளிவாக்கியது. சோழ வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், ராஜராஜ சோழனை விடப் பெரிதாக பேரரசை விரிவுபடுத்தியவர் ராஜேந்திரன் என்பதை அறிந்திருப்பார்கள். அதனால்தான் இந்த ஒப்பீடு சாதாரணது அல்ல.
துரைமுருகன் உரை
துரைமுருகன் மட்டும் அல்ல. கே.என்.நேரு, பொன்முடி, வேலு போன்றோர் சொல்லாலும் செயலாலும் உதயநிதியின் முன்னேற்றத்திற்கு திறந்த ஆதரவு அளித்து வருகின்றனர். திமுக மூத்த தலைமுறை கருணாநிதி-ஸ்டாலின் காலத்தை பார்த்தவர்கள். அந்த அனுபவத்திலிருந்தே, அடுத்த தலைமுறை யாரெனவும் அவர்கள் அறிந்து செயல் படுகின்றனர். இதற்கு கூட்டணிக் கட்சி தலைவர்களும் விதிவிலக்கல்ல. சென்னை கிழக்கு மாவட்ட திமுக நடத்திய உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் சொன்ன, "இருளுக்கு பின் உதயம் வரும்... உதயநிதியும் வருவார்" என்ற உரை, எதிர்கால முதலவர் அவர் என்ற செய்தியை வெளிப்படையாக ஒத்திகை செய்தது போலவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
உங்களுக்கு எதிராதான் பேசி இருக்காரு! விஜயுடன் துரை வைகோ பேசியது என்ன? நைசாக விசாரித்த உதயநிதி -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications