விஜய் - ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி என்ன? அரசியலா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
Recommended Video
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் சந்திப்பு ஏன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் நடிகர் விஜயும் திமுக தலைவர் ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டனர். திமுகவை சேர்ந்த மு.க.செல்வியின் பேத்தியான ஓவியாவின் நிச்சயதார்த்த விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் பொருளாளர் துரைமுருகனும் கலந்து கொண்டனர்.

சந்தித்தனர்
இதில் திமுக தலைவர் ஸ்டாலினும், நடிகர் விஜயும் சந்தித்துக்கொண்டார்கள். 3 நிமிடங்கள் இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொண்டனர். இந்த சந்திப்பு பெரிய வைரலானது. தமிழக அரசியலில் இந்த சந்திப்பு குறித்து நிறைய விவாதங்கள் எழுந்தது.

என்ன சொன்னார்
அதற்கு ஏற்றபடி இந்த சந்திப்பு குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அதில், நடிகர் விஜய் திமுகவில் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும். திமுக யாரை சேர்க்க நினைத்தாலும் சேர்க்கட்டும். அதிமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து குறைந்துள்ளது. இதனால் விஜய் மற்றும் ஸ்டாலின் இருவரும் சந்தித்துள்ளனர், என்றார்.

விவாதம்
அதேபோல் இணையத்திலும் இது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடந்தது. ரஜினிக்கு போட்டியாக விஜயை திமுக தங்கள் பக்கம் இழுக்க பார்க்கிறதா? சட்டசபை தேர்தலுக்கான முன்னெடுப்பாக இந்த சந்திப்பு இருக்குமா என்று விவாதங்கள் நடந்தது.

இதுதான் காரணம்
இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக கொடுத்துள்ள விளக்கத்தில், இது குடும்ப விழா அரசியல் விழா கிடையாது. இந்த விழாவிற்கு பலரை அழைத்து இருந்தோம். எங்களது குடும்ப விழாவுக்காக விஜய் வந்திருந்தார். இதில் அரசியல் எதுவுமில்லை. அது ஒரு எதார்த்தமான சந்திப்பு தான். அதை அரசியலாக்குவது தவறு, அது ஒரு அறியாமை, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications