வீட்டுக்கு விருந்தாளிகள் வர்றாங்க.. ரெய்டு ஒருபக்கம் திமுகவை தோண்டி எடுக்க.. கூலாக பேசிய உதயநிதி!
சென்னை: திமுகவினரை குறிவைத்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்த கேள்விக்கு கூலாக பதில் அளித்துள்ளார் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சனாதனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அதை இன்னுமா விடல என சிரித்தபடி கேட்டார்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரின் மகனே பேசியிருக்கிறார் என்று பிரதமர் கூறியிருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நான் ஏற்கெனவே பலமுறை பதில் சொல்லிவிட்டேன். சிஏஜி அறிக்கையைப் பற்றி பேசினோம், மணிப்பூர் மாநிலம் கடந்த 5 மாதங்களாக என்ன நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இந்த விவகாரத்தை திசைதிருப்பத்தான் சனாதன சர்ச்சையை பற்றி பேசுகின்றனர்.
சனாதனம் குறித்து நான் தொடர்ந்து பேசுவேன். பெரியார், அம்பேத்கர் சனாதனம் குறித்து பேசினார்கள். எங்கள் கட்சித் தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் என பலரும் பேசியிருக்கின்றனர். அதைவிட நான் ஒன்றும் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் நான் பேசியது தான் இப்போது பேசப்பட்டு வருகிறது. எனவே, பாஜகவினர் திசை திருப்ப வேண்டாம்" என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுகவினரை குறிவைத்து தொடர்ந்து நடைபெற்று வரும் அமலாக்கத்துறை ரெய்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை அடிக்கடி வரும். நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் போல் வந்து செல்கின்றனர். அதனால் கவலை இல்லை" எனத் தெரிவித்தார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications