அமைச்சரே ஷாக் ஆகிட்டாரு.. உதயநிதி காலில் படக்கென விழுந்த மூத்த எம்எல்ஏ! முதல்வரே என்ற கலெக்டர்!
திண்டுக்கல்: திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று திண்டுக்கல் வந்திருந்தார். இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகரும் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான காந்தி ராஜன் உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திண்டுக்கல் வந்தார். நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் புதிய மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின்
அதோடு, 49 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 61 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தான் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடந்தன. விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சரவணன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எனப் பேசியது கட்சியினர் மற்றும் அதிகாரிகள் இடையே லேசான சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆட்சியர் சரவணன்
அதைவிட மற்றொரு சம்பவம் தான் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி எம்எல்ஏ செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோருக்கு நடுவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நின்று கொண்டிருந்தார்.
காந்திராஜன் எம்எல்ஏ
அப்போது மேடைக்கு வந்த வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன், உதயநிதி ஸ்டாலினுக்கு ஏலக்காய் மாலை அணிவித்தார். அப்போது திடீரென உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்தார். இதனால் சற்றே அதிர்ச்சி அடைந்த உதயநிதி, அவ்வாறு செய்யக்கூடாது என்றார். அப்போது மேடையில் இருந்த அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
திமுகவினர் அதிர்ச்சி
அதிமுக ஆட்சிக்காலத்தில் எம்எல்ஏ ஆகவும் துணை சபாநாயகர் ஆகவும் இருந்த காந்திராஜன், அதற்குப் பிறகு திமுகவில் இணைந்து கடந்த 14 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதற்குப் பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னைவிட வயதில் மிக இளையவரான உதயநிதி ஸ்டாலின் காலில் திமுகவின் மூத்த எம்எல்ஏ ஒருவர் விழுந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்












Click it and Unblock the Notifications