உதயநிதிக்கு விஜய் திங்கட்கிழமை என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுகவுக்கு இதுதான் நடக்கப் போகுதா?
சென்னை: உதயநிதி கேட்ட கேள்விக்கு விஜய் பதில் என்ன? கடந்த 116 நாட்களில் 550 குற்றச் செயல்கள் நடந்திருக்கின்றன, கொலைகள் நடந்திருக்கின்றன, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன பதில் என்று கேட்டால், உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்று கடந்த காலத்திற்கு பின்னோக்கிச் செல்கிறார்கள். இந்த அரசு குற்றங்களைச் சட்டத்தின் முன் நிலைநாட்டுவதில் முற்றிலும் தவறிவிட்டது, தகுதியற்றது மற்றும் செயல்திறனற்றது என்று தவெக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.
ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் அடுக்கடுக்கான கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கிறார், ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு நேரில் பதில் சொல்ல முடிவதில்லை.

116 நாட்களில் 550 குற்றச் செயல்கள்
பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கட்டும் அல்லது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவாக இருக்கட்டும், யாராலும் பேச முடியவில்லை. அரசியலிலும் வாழ்க்கையிலும் இறந்த காலத்தில் வாழுற மனுஷனை பற்றி சொல்வதுண்டு.. இவர்கள் இறந்த காலத்தில்தான் நிற்கிறார்கள், இவர்களை வைத்துக்கொண்டு இந்த நாட்டை எப்படி எதிர்காலத்திற்குக் கொண்டு செல்வது?
கடந்த 116 நாட்களில் 550 குற்றச் செயல்கள் நடந்திருக்கின்றன, கொலைகள் நடந்திருக்கின்றன, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன பதில் என்று கேட்டால், உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்று கடந்த காலத்திற்கு பின்னோக்கிச் செல்கிறார்கள். இந்த அரசு குற்றங்களைச் சட்டத்தின் முன் நிலைநாட்டுவதில் முற்றிலும் தவறிவிட்டது, தகுதியற்றது மற்றும் செயல்திறனற்றது.
திங்கட்கிழமை பதில் சொல்கிறேன்
"யாரும் ஓடாமல் பார்த்துக் கொள்ளுங்கள், நான் திங்கட்கிழமை பதில் சொல்கிறேன்" என்று முதல்வர் சொல்கிறார்.. "ஓடாதே என்று சொல்லிவிட்டு இவரே ஓடிவிட்டார்" என்று உதயநிதி அதைத்தான் சுட்டிக்காட்டுகிறார்,
கரூரில் விட்டுட்டு ஓடியது விஜய்தான் என்பது உலகத்திற்கே தெரிந்த விஷயம். .. இந்த "ஓடு" என்ற வார்த்தை விஜய்யை பாதிக்க ஆரம்பித்துவிட்டது, அதனால் அந்த "ஓடு" என்ற விவகாரத்தை வேறு மாதிரி திசைதிருப்ப முயல்கிறார்கள். இவர் இன்னொருவரைப் பார்த்து ஓடு என்று சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே பேசுகிறாரே தவிர, மக்களுக்காக பேசவில்லை.
ஓடிடாதீங்க.. ஜோதிடர் நேரம் தந்தாரா?
முதலமைச்சருக்கு திறமை இருந்தால்தான், உடனுக்குடன் எழுந்து பதில் சொல்லியிருப்பார்.. ஆனால் இவரால் பேச முடியவில்லை.. அதனால்தான் திங்கட்கிழமை பதில் சொல்கிறேன் என்று சொல்லி செல்கிறார். ஏன், உடனே பதில் சொல்ல முடியாதா? அல்லது ஜோதிடர் ஏதாவது நேரம் குறித்துக் கொடுத்திருக்கிறாரா? எதையும் சரியாகத் தெரியாத விஜய் அன்று என்ன செய்யப் போகிறார்?
திங்கட்கிழமை முதலமைச்சரின் பதிலுரை தமாஷாக இருக்க போகிறது.. இவர்களது வேலையே கூச்சலும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதுதான்.. மானியக்கோரிக்கை மீது பதிலுரை தருவதால்தான், அதை திங்கட்கிழமை பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு, ஓடிடாதே என்று ஏன் சொல்ல வேண்டும்?
தமிழக சட்டசபை
இவர்களின் ஒரே நோக்கம், எதையாவது செய்து, திமுகவுக்கு கோபம் மூட்டி, அவர்களை வெளிநடப்பு செய்ய வேண்டும்.. உடனே, இதோ ஓடிட்டாங்க பாருங்க என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக யோசிக்கிறார்கள்.. எது அறிவித்தாலும் அது 110-விதியின் கீழ் அறிவிப்பதா?
பிரதமர் மோடி கூட பரவாயில்லை.. பார்லிமெண்ட்டில் சம்பந்தமே இல்லாமல் பேசினாலும் ஒரு மணி நேரம்கூட பேசுவார்.. இங்கே அதைவிட மோசம்.. தமிழக சட்டசபை எப்போதுமே நாவன்மைக்கு பெயர் பெற்ற இடம்.. ஆனால், நாக்கு செத்துப்போனவர்கள் இங்கே பதவியில் உட்கார்ந்துகொண்டு, மத்தவங்களை பதில் சொல்லுங்க என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
