உதயநிதி ஸ்டாலின் சொன்ன அந்த வரி.. "ஜமீன்களிலும் பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியல்".. செம வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜமீன்களிலும், பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திமுக உருவான நாள் இன்று என்று திமுக 78ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அத்துடன் பிரத்யேகமான ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம் 78ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. திராவிட இனத்துக்கு புதுவாழ்வு அளிக்கும் நோக்கில், கொட்டும் மழைக்கு மத்தியில் சென்னை ராபின்சன் பூங்காவில் திமுக உருவாக்கப்பட்ட நாளை அக்கட்சியினர் நினைவுகூர்ந்து வருகிறார்கள்..

Udhayanidhi DMK Anniversary

அண்ணா விதைத்த இயக்கத்தை கலைஞர் வளர்த்த நிலையில், சமூகநீதி, சுயமரியாதை, மாநில உரிமைகள் உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தி திமுக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறது.

இந்த நாளை நினைவுகூரும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மறுக்கப்பட்ட உரிமைகளை வென்று, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திய திமுக தற்போது 78-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆரியத்தின் ஆணவப்பிடி

அண்ணா விதைத்து, கலைஞர் வளர்த்த தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர்ச்சியையும் சிதைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூகநீதி, சுயமரியாதை மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசமின்றி களத்தில் நின்று வெல்வோம் எனவும் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல், திமுக 78-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு கட்சியின் சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஆரியத்தின் ஆணவப்பிடியாலும் மூடநம்பிக்கையின் முற்றுகையாலும் சிதைக்கப்பட்ட திராவிட இனத்திற்குப் புதுவாழ்வு தந்திட, கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்ட நாள் இன்று!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில், ஜமீன்களிலும், பண்ணைகளிலும் இருந்த அரசியலை பாமரர்களிடம் கொண்டு சேர்த்தது திமுக என்று உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், "ஜமீன்களிலும், பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திமுக உருவான நாள் இன்று. நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய திமுக இன்று 78வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் பல எட்டாத உயரங்களுக்கு தமிழ்ச் சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு.

திமுக ஆற்றிய பணிகள் ஏராளம்

சமூக நீதி, மாநில உரிமை, பெண் விடுதலை, தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை திமுக ஆற்றிய பணிகள் ஏராளம்.

எத்தனையோ அடக்குமுறைகள், ஏவப்பட்ட நெருக்கடிகள், புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது திமுக. கருப்பு, சிவப்பு வெறும் நிறமல்ல நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கட்சியின் மேன்மைக்கு அயராது உழைப்போம். கருப்பு, சிவப்பு வெறும் நிறமல்ல நம் உயிர் என்று முழங்குவோம். வாழ்க திமுக" என்று பதிவிட்டுள்ளார்.
.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+