Celebrity: பெரிய செலிபிரிட்டியா இருக்கலாம்! ஆனா பார்த்து வண்டியை ஓட்டணும்! கிருத்திகா பதிவுக்கு உதயநிதி பதில்!
சென்னை: செலிபிரிட்டி யார் என்பது குறித்து கிருத்திகா உதயநிதி போட்ட போஸ்ட்டுக்கு உதயநிதி ஒரு ரிப்ளை கொடுத்திருக்கிறார். அதில் பார்த்து வண்டியை ஓட்டணும் என உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
கிருத்திகா உதயநிதி , "பிரபலம் யார், நீங்களும் உங்கள் மீதான மக்களின் பார்வைதான் நான் என நினைத்து உங்களின் சுயத்தை நீங்கள் இழக்கும் போது நீங்கள் கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்" என பதிவிட்டுள்ளார்.

கிருத்திகாவின் இந்த பதிவு சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வந்தது. அவர் விஜய் குறித்துதான் இப்படி மறைமுக பதிவை போட்டுள்ளார் என பலரும் விவாதித்துள்ளனர். அதாவது விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் கள்ளக்காதல் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதை விமர்சித்துதான் கிருத்திகா பதிவு போட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் மனைவியின் பதிவிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பதில் கொடுத்துள்ளார்.
அதில் "நீங்கள் பெரிய பிரபலமாக இருக்கலாம். ஆனால் பார்த்து வண்டி ஓட்டணும்" என குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராயல் என்பீல்டு பைக்கை கிருத்திகா ஓட்டுகிறார். அதன் பேக்கிரவுன்டில் சின்னத்தம்பி படத்தில் மாலை கண் நோயால் அவதிப்படும் கவுண்டமணி, புது மனைவியுடன் நைட்ஷோவுக்கு போய்விட்டு பைக்கில் வீடு திரும்புவார்.

அப்போது இரவு நேரத்தில் கண் தெரியாததால் மனைவியிடம் ஒரு சேலன்ஸ் என கூறி, "நான் கண்ணை மூடி வண்டி ஓட்டுவேன், நீதான் வழிச் சொல்லணும்" என்பார். அப்போது கவுண்டமணி சற்று தடுமாறுவார். அப்போது அந்த மனைவி, "பாத்து பாத்து" என்பார். அதற்கு கவுண்டமணி, "ஏ நான்தான் பார்க்க மாட்டேனு முதலே சொல்லிட்டேனே" என்பார். உடனே ஏங்க வண்டி வருதுங்க, அய்யோ வண்டி" என கூறுவார். இந்த டயலாக்கை உதயநிதி கோர்த்துவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
ஏற்கெனவே ஒரு முறை உதயநிதி ஒரு விழாவில் கலந்து கொண்டு காதல் திருமணம் செய்து கொள்வது கஷ்டம் என பேசியிருந்தார். அந்த வீடியோவை பதிவிட்ட கிருத்திகா, ஆமாம் ரொம்ப கஷ்டம் என பதிலளித்திருந்தார். கிருத்திகாவின் இந்த நகைச்சுவையை பார்த்து பலரும் சிரித்தனர்.
U can be a big Celebrity ! But paathu vandi ottanum pic.twitter.com/GH9kd0lidC
— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) March 9, 2026
கிருத்திகா சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்குநர். வணக்கம் சென்னை, காளி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை இயக்கியுள்ளார். பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸையும் இயக்கியிருந்தார். இதையடுத்து அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் கியர் வைத்த வாகனத்தை ஓட்ட கிருத்திகா கற்று கொண்டு வருகிறார். அந்த வீடியோவைதான் உதயநிதி கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications