“ராமர் கோயில் திறப்பு மத நம்பிக்கைக்கு திமுக எதிரியல்ல! ஆனா மசூதியை இடிச்சது தப்பு” உதயநிதி ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமர் கோயில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞரணி மாநாட்டின் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. மாநில அரசுக்கான நிதி பங்கீடு, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருதல், மாநிலத்தின் பண்பாட்டு உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

Udhayanidhi Stalin said that DMK is not an enemy of Ram temple opening or religious faith

ஏற்கெனவே இதற்காக பைக் பேரணி நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், புயல் மழை காரணமாக மாநாடு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மாநாட்டை ஒட்டி இன்று சென்னையிலிருந்து சுடர் ஓட்டம் தொடங்குகிறது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து தொடங்கிய இந்த சுடர் தொடர் ஓட்டம் அண்ணாசாலை, பிலால் ஓட்டல், ஸ்பென்சர் சிக்னல், ஆயிரம் விளக்கு மெட்ரோ, ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணா மேம்பாலம் அமெரிக்க தூதரகம், அண்ணா அறிவாலயம், அன்பகம் சைதாப்பேட்டை, நந்தனம் கலைக் கல்லூரி, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர் மெட்ரோ, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சிங்க பெருமாள் கோவில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல் மருவத்தூர், அச்சரப்பாக்கம், திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம், அரசூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தலைவாசல் ஆத்தூர் வழியாக பெத்த நாயக்கன் பாளையத்துக்கு 20-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்றடைகிறது.

மாநாட்டு சுடருக்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மொத்தமாக சுடர் 316 கி.மீ தொலைவு பயணிக்கிறது. இந்த சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதி, "ராமர் கோயில் திறப்பிற்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+