குறை கூறுவதற்கு மட்டும் தலையை வெளியே காட்டும் எதிர்க்கட்சிகள்! உதயநிதி ஸ்டாலின் வேதனை!
சென்னை: குறை கூறுவதற்காக மட்டுமே எதிர்க்கட்சிகள் தலையை வெளியே காட்டுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேதனைத் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் - கனமழை ஏற்படுத்திய வரலாறு காணாத பேரிடரால் சென்னை காஞ்சிபுரம் - திருவள்ளூர் - செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் - இளைஞர் அணியினர் - கழக உடன்பிறப்புகள் என அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி நள்ளிரவு முதல் தற்போது வரை நானும் தொடர்ந்து களத்தில் நின்று வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு - மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறேன்.
குறை கூறுவதற்காக மட்டுமே தலையை வெளியே காட்டும் எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில், மக்களுடன் நிற்பதும் அவர்களைப் பேரிடரிலிருந்து மீட்பதுமே நமது தலையாயப் பொறுப்பு. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுக்குச் செவிமடுத்தும் -வன்மத்துடன் வருகின்ற விமர்சனங்களை எதிர்கொண்டும் மக்களுக்கான உதவிகளை, நம் கழகத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த மாபெரும் மீட்பு - நிவாரணப் பணிகளின் காரணத்தால், சேலத்தில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறவிருந்த 'மாநில உரிமை மீட்பு' முழக்கமான நம் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை, டிசம்பர் 24-ஆம் தேதி நடத்துவது, என்று தலைமைக் கழகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கேற்ப இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டச் செயலாளர்கள் இளைஞர் அணியின் மாநில - மாவட்ட ஒன்றிய நகர பகுதி - பேரூர் நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
இயற்கைப் பேரிடரிலிருந்து நம் மக்களை இப்போது மீட்போம் 10 ஆண்டு காலமாக பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தி வரும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்க, டிசம்பர் 24 அன்று சேலத்தில் கூடுவோம்; இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம்.''
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications