என் தலைக்கு 10 லட்சம் விலை பேசினார்கள்! ஆனால்.. நடந்ததே வேறு! உடைத்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால், நான் ஒரு நிகழ்ச்சியில் பிறப்பால் ஏற்றத்தாழ்வு சொல்கின்ற எந்த விஷயத்தையும் அழிக்கணும் என பேசினேன், அதற்காக, என் தலையை சீவினால் 10 இலட்சம் தருகிறேன் என ஒரு சாமியார் சொன்னார். ஆனால் நான் அதற்கெல்லாம் அஞ்சவில்லை என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து நாட்டு நலப்பணித்திட்ட மாணாக்கர்களுக்கு 3 நாள் பயிற்சி பட்டறை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிறைவு நாளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்," சமூக ஊடகங்கள் பெருகியுள்ள இந்த கால கட்டத்தில், மிகப்பெரிய அளவிலான பொய்யான செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் ஒரு பாசிச கும்பல், பொய்ச்செய்தி பரப்புறதையே அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளார்கள்.

பொய்யான செய்திகள்
பொய்யான செய்திகள் மூலம், மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தவும், அறிவை மழுங்க செய்யும் நோக்கத்தோடு தான் பொய்யான கதைகளை அவிழ்த்து விட்டுகொண்டே உள்ளார்கள். இதுபோன்ற பொய்யான செய்திகளை எவ்வாறு கையாள்வது என்ற கேள்விகள் உலகம் முழுவது எழுந்து கொண்டே உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
வதந்திகளைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் உண்டு. ஒன்று Misinformation. இரண்டாவது Disinformation. Misinformation என்பது எந்த உள்நோக்கமும் இல்லாமல் பரவுகிற பொய்செய்திகள். ஆனால், இந்த Disinformation என்பது திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு பரப்பப்படுகிற பொய்செய்தியாகவே அமைந்துள்ளது. Misinformation-ஐ விட Disinformation மிக, மிக ஆபத்தானது. குறிப்பாக, உலகளாவிய அபாயங்கள் குறித்த 2024, அறிக்கையின் படி, உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மிகப்பெரிய ஆபத்துகளில் இண்டாவது இடத்தில் Disinformation தான் உள்ளது.
பொய்செய்தி அபாயம்
இன்றைக்கு வேண்டுமானால் இரண்டாவது இடத்தில் இருக்கலாம். ஆனால், இன்னும் 2 ஆண்டுகள் கழித்து, இந்த Disinformation மற்றும் Misinformation இரண்டும் தான் உலகத்துலேயே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகின்றது. போலிச் செய்திகள் மட்டுமில்ல, இன்றைக்கு வெறுப்புப் பேச்சும் பெரிய அளவில் நாட்டையே பாதித்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், வெறுப்புப் பேச்சால் மிகவும் பாதிக்கப்படுற சூழல் உள்ளது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக, வட மாநிலங்களில் பீஃப் வைத்திருப்பதாக கூறி கும்பலாக அடிப்பதை எல்லாம் பார்த்தோம்.
தவறான தகவல்
வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுறாங்கன்னு ஒரு பொய்யை பரப்பினார்கள். உடனே பீகார்ல இருந்து அலுவலர்களை வர வைத்து, வட மாநில தொழிலாளர்கள் இருக்கிற இடங்களுக்கு எல்லாம், நம்ம அரசு சார்பில் அழைத்து சென்று காட்டினோம். அவர்கள் இங்கு மிகவும் பாதுகாப்பாகத்தான் உள்ளார்கள் என பீஹாரிலிருந்து வந்த அரசு அதிகாரிகள் உறுதி படுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால், நான் ஒரு நிகழ்ச்சியில் பேசினேன். பிறப்பால் ஏற்றத்தாழ்வு சொல்கின்ற எந்த விஷயத்தையும் அழிக்கணும் என பேசினேன். உடனே, என் பேச்சை திரித்து, நான் சொல்லாத விஷயங்களையும் சொன்னேன் என, ஒரு கும்பல் நாடு முழுக்க பரப்பிவிட்டனர்.
தலைக்கு 10 இலட்சம்
அதற்காக, என் தலையை சீவினால் 10 இலட்சம் தருகிறேன் என ஒரு சாமியார் சொன்னார். மற்ற மாநிலங்கள் போல தமிழ்நாடு எதையும் உடனே நம்பாது. ஏன் என்றால், இது தந்தை பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண். தந்தை பெரியார் அவர்கள் ஒரு விஷயத்தை யார் சொன்னாலும், ஏன் நானே சொன்னாலும் உடனே நம்பாத. "உன் பகுத்தறிவுக்கும் - புத்திக்கும் அது சரி என்று பட்டால் மட்டும் ஏத்துக்க. இல்லை என்றால், ஏன், எதற்கு என்று கேள்வி கேளு" என்று சொன்னவர் தான் நம் தந்தை பெரியார் அவர்கள்.
வெறுப்புப் பேச்சு
அந்த வழியில், தவறான தகவல்களைத் தடுப்பதுடன், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, அரசு சார்பில் ஒரு dedicated Fact Check Unit தொடங்கப்பட்டது. இன்றைக்கு Tamil Nadu Fact Check Unit செயல்படுகிற வேகத்தை பார்த்து, தவறான தகவல்கள் பரப்புகின்ற கும்பல் கதறி கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு கடந்த ஆண்டுகளை விட சமீப காலமாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தமிழ்நாட்டில் மிகவும் குறைந்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications