எல்லா மதத்தினருக்கும் பொதுவானவன் நான்! எல்லா பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்வேன்! உதயநிதி 'பளிச்'!
சென்னை: எல்லா மதத்தினருக்கும் பொதுவானவன் நான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்துச் சொன்னது போல், தை பொங்கலுக்கும் வாழ்த்துச் சொல்வேன், ரம்ஜான் பண்டிகைக்கும் வாழ்த்துச் சொல்வேன் என அவர் கூறியிருக்கிறார்.
ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதை அமைச்சர் சேகர்பாபுவை பார்த்து மற்ற மாவட்டச் செயலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

அன்பழகன் நூற்றாண்டு
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபுவை புகழ்ந்து தள்ளிவிட்டார். தனது மனதுக்கு நெருக்கமான மாவட்டங்களில் சென்னை கிழக்கு மாவட்டமும் ஒன்று எனக் கூறிய அமைச்சர் உதயநிதி, தன்னை மற்ற மாவட்டங்களிலும் கட்சிப்பணிகளை கவனிக்க விடுமாறு அமைச்சர் சேகர்பாபுவுக்கு அன்புக் கோரிக்கை விடுத்தார்.

பொதுவான நபர்
வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு தன்னால் செல்ல முடியாத அளவுக்கு சென்னை கிழக்கு மாவட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு நிகழ்ச்சிகளை நடத்தி தன்னை அழைத்து வருவதாக கூறினார். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தாம் வாழ்த்துக் கூறியது வைரலானதாகவும் தன்னை பொறுத்தவரை சாதி மதம் பார்க்க மாட்டேன் எனவும் தெரிவித்தார். எல்லா மதத்தினருக்கும் பொதுவானவன் நான் என பேசிய அமைச்சர் உதயநிதி எல்லா பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்வேன் எனத் தெரிவித்தார்.

எல்லா பண்டிகைகளுக்கும்
மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்துச் சொன்னது போல், தை பொங்கலுக்கும் வாழ்த்துச் சொல்வேன், ரம்ஜான் பண்டிகைக்கும் வாழ்த்துச் சொல்வேன் என அவர் கூறியிருக்கிறார். தன்னை பொறுத்தவரை உங்கள் வீட்டுச் செல்லபிள்ளையாக இருக்கவே விரும்புகிறேன் என கூட்டத்தினரை நோக்கி கூறினார். இதனிடையே இவருக்கு முன்னதாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஒரு போர்வீரனை போல் சுழன்று கொண்டிருப்பதாக புகழாரம் சூடினார்.

தயாநிதி மாறன்
இதனிடையே அந்தக் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சராக பொறுப்பேற்றதும் 234 தொகுதிகளிலும் விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவித்து முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசியிருக்கிறார் உதயநிதி எனத் தெரிவித்தார்.
-
திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications