“ப்யூஸ்” போன தவெக அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்துமா? உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளும் தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். "தவெக அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மின்வெட்டு அதிகரித்துள்ளது. காற்றாலைகளில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதால் மின் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக தவெக அரசை விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Udhayanidhi Stalin Slams TVK Government

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார். மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' தவெக அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+