இனிகோவுக்கு WFH தெரியாது.. உங்க வீட்டுக்கே வருவாரு.. விஜய் தொகுதியில் இறங்கி அடித்த உதயநிதி
சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசினார். மேலும் பேசிய அவர், "இங்கு போட்டியிடும் இனிகோ இருதயராஜுக்கு வொர்க் ப்ரம் ஹோம் அரசியல் தெரியாது. உங்க வீட்டுக்கே அவர் வருவார்.. சில பேர் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயட் ஆகிட்டாங்க என்றும் பேசினார்.
தமிழ சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் தான் இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு தொகுதியாக சென்று தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறனர். வேட்பாளர்களும் ஓட்டுக்களை கவர விதவிதமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சி கிழக்கில் உதயநிதி பிரசாரம்
மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுகவும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று அவர் விஜய் போட்டியிடும் தொகுதியான ஸ்டார் அந்தஸ்து பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மறைமுகமாக விஜய்யை விமர்சனம் செய்தார்.
உதயநிதி பேசியதாவது:- உதாரணமாக கொரோனா லாக்டவுனில் கூட நாம் மக்களுக்கு ஓயாமல் உழைத்து வந்தோம். நம் உயிரை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக சேவை செய்தோம். ஆனால் கொரோனா லாக் டவுன் மாதிரி இன்னைக்கு பலபேர் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். நாம மத்தவங்க மாதிரி பிரேக் விட்டு பிரேக் விட்டு பிரச்சாரம் பண்ணல.. சில பேர் இன்னைக்கு ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டு ஆகிட்டாங்க..
அங்க ஒரு கால்.. இங்க ஒரு கால்
ஆனால் நாம ரெஸ்ட் எடுக்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டு இருக்கோம். டயர்ட் ஆகாம மக்களை சந்தித்துக்கொண்டு இருக்கோம். இனிகோ இருதயராஜ் தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு தமிழகம் முழுக்க நண்பர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் பல தொகுதிகளில் நிற்பதற்கு அவருக்கு வாய்ப்பு இருந்தது.
ஆனால் அங்க ஒரு கால்.. இங்க ஒரு கால் என குறுக்கு மறுக்காக நிற்கவில்லை. இரண்டு கால்களையும் திருச்சி கிழக்கில் தான் நிற்பேன் என்று சொல்லி நிற்கிறார். திருச்சி கிழக்கில் தான் நிற்பேன் என்று ஸ்ட்ராங்க நிற்கிறார். ஏனென்றால் அவருக்கு தெரியும் ஒரு இடத்தில் நின்றால் கூட நீங்க வெற்றியை தேடித் தருவீர்கள் என்று. அந்த தைரியத்துல, நம்பிக்கையில நிக்கிறார்.
ஒர்க் ப்ரம் ஹோம் எல்லாம் தெரியாது
இத சொன்னால் என்ன என்னவென்று சொல்வார்கள் தெரியுமா? உதயநிதி மட்டும் திருவல்லிக்கேனி - சேப்பாக்கம் என இரண்டு தொகுதியில் நிற்கிறார் என்று சில அறிவாளிகள் சொல்வார்கள்.. இது கூட தெரியாத ஒரு தற்குறி கூட்டத்துக்கிட்ட போய் என்ன சொல்றது.. திருவல்லிக்கேனி - சேப்பாக்கம் என்பது ஒரே தொகுதி என்று கூட தெரியாமல் பேசும் தற்குறி கிட்ட நம்ம என்ன சொல்ல முடியும்.. நீங்க பாட்டு கத்திட்டு கிடங்க.. நாங்கள் மக்கள் சேவை செய்றோம்னு நம்ம வேலையை பாப்போம்.
இங்க இருக்கிற இருதயராஜ் உங்களுடைய வீடு தேடி வருவார். அவருக்கு ஒர்க் ப்ரம் ஹோம் எல்லாம் தெரியாது. உங்களுக்கு எதும் பிரச்சினை என்றால் உங்க வீட்டுக்கு வருவார். உங்களை அவங்க வீட்டுக்கு வர சொல்ல மாட்டார். உதவி பொருட்கள் வாங்குவதற்கு கூட உங்கள அவங்க வீட்டுக்கு கூப்பிட மாட்டார்.. திருச்சி கிழக்கு தொகுதி முட்டாள் தொகுதி இல்லை என்பதை நீங்கள் நிரூபித்து காட்ட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications