Dummy முதலமைச்சர்.. பஞ்ச் டயலாக் சிஎம்? ஆந்திராவுக்கு பறந்தது இதற்காக தானா? விட்டு விளாசிய உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் தேவையைச் சமாளிக்க தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், திமுக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது என எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்

தமிழகத்தின் மின்தேவையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்காக மின்வாரியம் டெண்டர் கோரியதாக சொல்லப்படுகிறது. இந்த டெண்டரில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.31.99 முதல் ரூ.37 வரை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தன.

இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரத் தேவையை ஈடுகட்டவும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Udhayanidhi Stalin Vijay Electricity

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக எதிர்க் கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திமுக ஆட்சிக் காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டெண்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது.

மின்சார கொள்முதல்

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத் திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர். இப்படி கொள்ளை அடிக்கத் தான், 'காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு' என்றெல்லாம் கட்டுக் கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?

ஆந்திரா பயணம்

இந்த ஊழல் deal முடிக்கத் தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்? ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது.

விஜய் அரசு

விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது. மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+