என்னாச்சு? சட்டென கனிமொழி டாப்பிக்கை கையில் எடுத்த உதயநிதி.. இது நல்லாருக்கே! உற்று பார்த்த ஸ்டாலின்
சென்னை: நேற்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசிய டாப்பிக் ஒன்று அதிகம் கவனம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதங்கள் இதில் நடைபெற்று வருகிரியாது. இந்த அமர்வு மே 10ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் பல்வேறு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. இன்று சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக்கோரிக்கை நடைபெறுகிறது.

என்ன
நேற்று சமூக நலத்துறை மானியக்கோரிக்கையில் விவாதம் நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை எல்லா வயது திருநங்கையர்களுக்கும் வழங்க வேண்டும். திருநங்கையர் அனைவரையும் ஆதரவற்றவர்கள் என கருதி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

18 வயது
18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு இந்த உதவி கிடைக்கும் வகையில் வழி செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவர் திருநங்கை/திருநம்பி என்று அறிந்து அதை வீட்டில் சொன்னதும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுகிறார்கள். பலர் இப்படி ஆதரவற்றவர்களாகிவிடுகிறார்கள். பலர் சாலைகளில் உதவி வேண்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உதவ வேண்டும்
இதனால் 18 வயதில் இருந்தே அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். திருநங்கைகளாக உள்ள அனைவரையும் வாரியத்தில் சேர்க்க வேண்டும். இதற்கான அடையாள அட்டையை 18 வயதில் இருந்தே வழங்கவேண்டும். திருநங்கைகளாக பள்ளி பருவத்தில் உணரும் நபர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் கவுன்சிலிங் உதவிகளை செய்யவும் வழி ஏற்படுத்த வேண்டும். அதும் மட்டுமின்றி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வகை செய்ய வேண்டும்.

கோவில்
கோவில்களில் திருநங்கையர்களையும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். பொதுவாக திமுக எம்பி கனிமொழி தொடர்ந்து இது போன்ற விஷயங்களில் ஆர்வமாக கருத்து தெரிவிப்பார். பெண்கள், திருநங்கைகள் தொடர்பான கருத்துக்களை, கோரிக்கைகளை நாடாளுமன்றத்திலும், பொது இடங்களிலும் கனிமொழிதான் வைப்பது வழக்கம். நேற்று கனிமொழியின் இந்த டாப்பிக்கை கையில் எடுத்து அதை சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சந்திப்பு
சமீபத்தில் திருநங்கையர் நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை திருநங்கைகள் சிலர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர்கள் ரியா, சுதா, கேத்ரினா, செல்வி சாந்தோசம், மோனிகா ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற திருநங்கைகளை முதல்வர் ஸ்டாலின் வரவேற்று விருந்தினர்கள் அறையில் அமர வைத்து பேசினார். இந்த நிலையில்தான் திருநங்கையர் பற்றி உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசி உள்ளார்.

ஸ்டாலின்
நேற்று உதயநிதி ஸ்டாலின் இந்த விஷயத்தை கையில் எடுத்து தனது சட்டசபையில் இப்படி பேசியதை திமுக உறுப்பினர்கள் பலரும் ஆர்வமுடன் கேட்டனர். ஏனென்றால் உதயநிதி ஸ்டாலின் அதிகமாக சட்டசபையில் மானியக்கோரிக்கைகளில் கேள்விகள் எழுப்பியது இல்லை. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசிய போது அதை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் உற்று பார்த்துக்கொண்டு இருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications