உதயநிதி ஸ்டாலின் போட்ட போடு.. எடப்பாடி அதுக்கு மேல.. கார் விஷயத்தில் அதிரடி.. கையை பிசையும் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் புதிய வாகனம், ஓட்டுநர், உதவியாளர் என அனைத்தும் அரசு சார்பில் வழங்கப்படும் என்று நேற்று சட்டமன்றத்தில் அறிவித்தார் முதலமைச்சர் விஜய். இதற்கு பொது வெளியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது... இப்படியொரு எதிர் விமர்சனங்களை, தவெக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. இந்நிலையில்தான், எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

எம்எல்ஏக்களுக்கு கார் அறிவிப்பு, பொதுவெளியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.. நிதி நெருக்கடியால் அவதிப்படும் அரசு, அனைத்திற்கும் பணம் இருப்பதாக சொல்லிவிட்டு, இப்போது கார்கள் வாங்குவதற்காகக் கோடிக்கணக்கில் செலவிடுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Udhayanidhi Stalin

தவெக எம்எல்ஏக்கள்

தேர்தல் காலத்தில் மக்களின் ஆதரவை கோரி பதவியேற்கும் உறுப்பினர்கள், அடிப்படைத் தேவைகளை கூட சுட்டிக்காட்டாமல் இதுபோன்ற செலவுகளை மேற்கொள்வது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களிலும் இத்தகைய செயல்களுக்குக் கண்டனங்கள் எழுந்து வருவதுடன், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுத்து பொதுநல பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

அதுமட்டுமல்ல, சாதாரண மக்களின் வரிப்பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் செலவழித்து இலவசமாக கார்கள் வழங்குவது அரசின் சரியான முடிவா?

சொகுசு கார் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடி நிலவும் இந்த காலகட்டத்தில், கார் இல்லாத உறுப்பினர்களுக்கு மட்டும் தேவைக்கேற்ப சலுகைகள் வழங்கியிருக்கலாமே அல்லது சம்பந்தப்பட்ட கட்சிகளின் நிதியில் இருந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாமே தவிர, பொதுமக்களின் வரிப்பணத்தை இதற்காக வாரி இறைப்பது எந்த விதத்தில் சரி என்ற வாதங்கள் சமூக வலைதளங்களிலும் அனல் பறக்க விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், திமுகவின் முக்கிய நிர்வாகியான உதயநிதியும் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதி ஸ்டாலின்

தங்களின் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் ஏற்கனவே சொகுசு கார்கள் இருப்பதால், அரசு தரப்பில் இருந்து வழங்கப்படவுள்ள கார்கள் மற்றும் சலுகைகள் எதையும் பெற வேண்டாம் என அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்..

இந்த சலுகைகளை ஏற்கும்பட்சத்தில் அது பொதுமக்களிடையே சர்ச்சையாகவும், தங்களது சொத்து விவரங்கள் பொதுவெளியில் அம்பலப்படுவதற்கும் வழிவகுக்கும் என்பதால், தங்களுக்கு இந்த கார்கள் தேவையில்லை என சபாநாயகருக்குக் கடிதம் வழங்குமாறு தங்களது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த இருவரும் தனித்தனியாக தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதுமட்டுமல்ல, தங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இந்த கார் சலுகையைப் பெறக் கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் உதயநிதி தெரிவித்திருப்பதாகவும் உடன்பிறப்புகள் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பொதுமக்களின் வரிப்பணம் எந்த விதத்திலும் வீணடிக்கப்படக் கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதுடன், இந்தத் தற்காலிக ஆடம்பர திட்டங்களுக்கு எதிராக தொடர் எதிர்ப்புகளும் அரசியல் களத்தில் எதிரொலித்து கொண்டிருக்கின்றன. இதனால் ஆளுங்கட்சி தரப்பு மிகுந்த இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இது குறித்த விவாதங்களும் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகின்றன.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+