துணை முதல்வர் + புதிய துறை! அமைச்சர் உதயநிதிக்கு வரப்போகும் இலாக்கா என்ன? தூக்கப்படும் அந்த அமைச்சர்
சென்னை: அமைச்சர் உதயநிதியின் இலாக்கா மாறுகிறது என்று தலைமை செயலக வட்டாரங்களில் பரபர தகவல்கள் பரவி வருகிறது. நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது.
மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்கு பின் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம் அவர் அமைச்சராவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. எனவே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம். இதனால் தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் அமைச்சரவை மாற்றத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் சமீபகாலமாக சொல்லி வந்தார். அவரது ரிலீசுக்காகத்தான் அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உயர்வும் தள்ளிப்போனது.
செந்தில் பாலாஜி வரட்டும். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை செய்யலாம் என்று தாமதம் செய்ததாக கூறப்பட்டது. செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். அவர் வருகைக்காகவே ஸ்டாலின் காத்து இருக்கிறார் என்று கூறப்பட்டது.
தற்போது, செந்தில் பாலாஜி வெளியே வந்திருப்பதால் கேபினெட் மாற்றம் நடக்கப்போகிறது. கேபினெட் மாற்றம் நடக்கும் போது, உதயநிதியை துணை முதல்வராக்கும் அறிவிப்பும் வரவிருக்கிறது. துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது.
மனம் மாறிய உதயநிதி: முன்பு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதில்.. ஸ்டாலினுக்கும் பெரிய ஆர்வம் இல்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரிய விருப்பம் இல்லாமல் இருந்தது.
உதயநிதியே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் பதவிக்கே ஏகப்பட்ட போன்கால்கள், அதிகாரிகள் மீட்டிங் என நேரம் விரையமாவதால், துணை முதல்வரானால் 90 சதவீத முதல்வர் பணிகளை செய்ய வேண்டிய நிலை வருவதை அவரே ரசிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் ஆட்சி நிர்வாகத்திற்கும், எதிர்காலத்திற்கும் அவசியம் என்பதால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம். உதயநிதி ஸ்டாலினும் இதை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆளுநர் தேவையில்லை: துணை முதல்வருக்கெல்லாம் கவர்னர் பதவியேற்பு செய்து வைக்கத் தேவையில்லை. இப்படிப்பட்ட நிலையில், துணை முதல்வராக உதயநிதி அறிவிக்கப்படும் போது, அவரது இலாக்காவையும் மாற்றியமைக்க விரும்புகிறாராம் ஸ்டாலின். அந்த வகையில், விளையாட்டுத்துறையை எடுத்து விட்டு ஊரக வளர்ச்சித் துறையை அவருக்கு வழங்க, முதல்வர் ஆலோசித்துள்ளார். இதைப்பற்றி உதயநிதியிடம் விவாதித்துள்ளார் ஸ்டாலின்.
ஊரக வளர்ச்சித்துறை மாற்றப்பட்டால் அமைச்சர்கள் பலரின் துறையும் மாற்றப்படவிருக்கும். இதற்கிடையே, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேபினெட்டில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் புதிய அமைச்சராக்கப்படலாம். துணை முதல்வர் பதவி, அமைச்சரவை மாற்றம், இலாக்கா மாற்றம் என மூன்று விசயங்களை எதிர்கொள்ளவிருக்கிறது திமுக அமைச்சரவை என்கிறார்கள் திமுக மேலிட தொடர்பாளர்கள்.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications