OG திமுக.. பவர் சென்டராக மாறும் கழகம்! செயற்குழு கூட்டத்தில் உதயநிதி கொண்டு வரும் மாற்றம்!
சென்னை: சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, கட்சியின் கட்டுமானத்தை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை 77லிருந்து 110ஆக உயர்த்தி இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தற்போது திமுகவில் அமைப்பு ரீதியாக 77 மாவட்டங்கள் இருக்கின்றன. இதனை 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்று பிரிக்க கட்சி தலைமை யோசித்து வருகிறது. இப்படி பிரித்தால் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரிக்கும்.

யாருக்கு பதவி?
புதியதாக உருவாக்கப்படும் மாவட்டங்களில் யாரை மாவட்ட செயலாளராக போடுவது என்பதுதான் தற்போது பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது. திமுக இன்று நேற்று உருவான இயக்கம் கிடையாது. தமிழக வரலாற்றை திமுக இல்லாமல் எழுத முடியாது. அந்த அளவுக்கு திமுகவின் வரலாறு இருக்கிறது. இப்பேர்ப்பட்ட கட்சியின் மாவட்ட செயலாளராக நிச்சயம் மூத்த அரசியல் தலைவர்களைதான் நியமிக்க வேண்டும் என்று கருத்து இருக்கிறது.
ஆனால், கரப்பான் ஜனதா கட்சியின் செயல்பாடுகள்.. அக்கட்சியின் பின்னால் அணி திரளும் இளைஞர்கள் இதையெல்லாம் பார்க்கும் போது GenZ தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே மா.செ பதவிகள் இளைஞர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன.
உதயநிதியின் ஐடியா
அப்படி எடுத்த எடுப்பில் இளைஞர்களை பவருக்கு கொண்டு வந்தால் நல்லா இருக்குமா? என மூத்தவர்கள் முட்டுக்கட்டை போட.. கட்சி தலைமை புது ஐடியாவை யோசித்தது. ஒருமித்த கருத்து உள்ள இடங்களில் இளைஞர்களை மா.செ பதவிக்கு கொண்டு வரலாம். கருத்து வேறுபாடு உள்ள இடங்களில்.. தேர்தல்கள் மூலம் மா.செக்களை நியமிக்கலாம் என்று யோசித்திருக்கிறது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
தேர்தலுக்கு எதிர்ப்பு
தேர்தல் என்று வைத்தால் மீண்டும் கோஷ்டி பூசல்கள்தான் தலையெடுக்கும். எனவே தேர்தல்கள் வேண்டாம். இளைஞரணி நிர்வாகிகளை மா.செ ஆக நியமிக்கலாம் என்று உதயநிதி தரப்பு கூறி வருகிறது. கரப்பான் ஜனதா போராட்டம், இடதுசாரி மாணவர்களின் செயல்பாடுகள், உலகம் முழுவதும் அதிகரித்துள்ள GenZ இளைஞர்களின் அரசியல் பங்களிப்புகள்.. இதையெல்லாம் கருத்தில் கொண்டால் உதயநிதி சொல்வதுதான் சரி. ஆனால், அப்படி செய்தால் மூத்த நிர்வாகிகள் கோபித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த பிரச்சனையை எப்படி கையால்வது என்று தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
செயற்குழு கூட்டம்
இந்த பின்னணியில்தான் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்திருக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில், கட்சியில் செய்யப்பட வேண்டிய அமைப்பு ரீதியான மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் 77ஆக இருந்த அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆகவும், ஓய்வு பெறும் வயது 70ஆகவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
