உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல், இருமல்! ஓய்வெடுக்க டாக்டர்கள் அட்வைஸ்.. நிகழ்ச்சிகள் கேன்சல்!
சென்னை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வருவதால் அடுத்த சில நாட்களுக்கு ஓய்வில் இருப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

மதுரை உத்தங்குடியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக்குழு மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள், முதன்மை செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து இருந்தனர். அமைச்சர்கள் பலரும் மேடைக்கு கீழே முன் வரிசையில் அமர்ந்து இருந்தனர்.
துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மேடையில் ஏறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கீழே முதல் வரிசையில் அமர்ந்து இருந்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் மாஸ்க் அணிந்திருந்தார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் இருந்து உத்தங்குடி செல்லும்போதும் காரில் தனியாக மாஸ்க் அணிந்தபடி இருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு, சளி, காய்ச்சல், இருமல் இருப்பதால் தான் அவர் மாஸ்க் அணிந்திருந்தார் என்றும், அதன் காரணமாகவே மேடைக்குச் செல்லவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடுமையான இருமல் இருப்பதால் அவர் ஓய்வெடுத்து வருகிறார். அடுத்த சில நாட்களுக்கு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். எனவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவிலும், அதையொட்டிய நிகழ்ச்சிகளிலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications