உங்க அளவுக்கு அனுபவம் இல்லை.. என்ன உதயநிதி முதல்வரை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க!

சசிகலாவின் காலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படத்தை திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஷேர் செய்து கிண்டல் செய்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் காலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படத்தை திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஷேர் செய்து கிண்டல் செய்து இருக்கிறார்.

திருச்சியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அவர் தனது பிரச்சாரத்தில் திமுகவை கடுமையாக சாடி பேசி இருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்த அவர், ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

முதல்வர் பழனிச்சாமி தனது பேச்சில், நான் மக்கள் செல்வாக்கால் மேலே வந்தவன். ஆனால் திமுகவில் அப்படி இல்லை. ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. அவர் தன் அப்பா கருணாநிதியின் செல்வாக்கால் முன்னுக்கு வந்தவர். திமுகவினர் ஆளுங்கட்சியாக வந்தால் என்ன செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

அப்படித்தான்

அப்படித்தான்

உதயநிதியும் அப்படித்தான். அவருக்கு என்று எந்த செல்வாக்கும் இல்லை. அவருக்கு அரசியல் அறிவு இல்லை. அதேபோல் அரசியல் அனுபவமும் இல்லை. உதயநிதி மரியாதை என்னவென்று தெரியாத வாரிசு அரசியல் செய்கிறார். அரசியலில் எனது அனுபவம் அளவிற்கு கூட வயது இல்லாதவர்தான் உதயநிதி, என்று முதல்வர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அட டிவிட்

அட டிவிட்

இதற்கு தற்போது, உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், ஆமாம் ! உங்க அளவுக்கு அனுபவம் இல்லை! என்று டிவிட் செய்துள்ளார். இதில் முதல்வர் பழனிச்சாமி, முதல்வராக பதவி ஏற்கும் முன், சசிகலா காலில் விழுந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பலர் ஷேர்

பலர் ஷேர்

இந்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. திமுகவினர் பலர் இந்த டிவிட்டை ஷேர் செய்து வருகிறார்கள். அதேபோல் அமமுகவினரும் இதை ஷேர் செய்து வருகிறார்கள். ஆனால் முதல்வர் குறித்து உதயநிதி இப்படி பேசி இருக்க கூடாது என்று அதிமுகவினர் விமர்சனம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+