"பச்சை துரோகம்".. இவ்ளோ நாளா இப்படித்தான் செய்தாங்களா.. விஜயபாஸ்கருக்கு உதயநிதி நறுக் கேள்வி
பாஜக, அதிமுகவுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசே தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த விளக்கத்துக்கு, "இவ்வளவு நாளாக எல்லாத்தையும் இப்படித்தான் ஆலோசித்து செய்தார்களா?" என்று உதயநிதி ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.
Recommended Video
நாட்டில் நாளுக்கு நாள் தொற்று பரவல்அதிகரித்து வருகிறது.. எனவே தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.. இதனால் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
மற்றொரு புறம், கொரோனா நோயாளிக்கு பெருமளவு தேவையாக இருந்து வரும் ஆக்சிஜன் தேவையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது... ஆனால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. இதனால் பரிதாப மரணங்களும் நம் கண்முன்னே அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.

இறக்குமதி
இப்போது, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால், 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது... அதேசமயம், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை அனுமதியில்லாமல் பிற மாநிலங்களுக்கு அனுப்பும் வேலையையும் பாஜக செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கேற்றபடி, சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில், 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
|
ட்வீட்கள்
இதைவிட பெரிய அதிர்ச்சி, இந்த மாதிரியான ஒரு முடிவை, தமிழக அரசிடம் கலந்து மத்திய அரசு ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதற்குதான் உதயநிதி காட்டமான கேள்வியை எழுப்பி 3 ட்வீட்களை அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார். அவை இவைகள்தான்:

விளக்கம்
"தமிழகத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா- தெலங்கானாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. இதுபற்றி எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் வேறு கொடுக்கிறார். இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் எதையும் செய்தார்களா என்ன?

உரிமைகள்
"மாநிலத்தில் அரசு என ஒன்று இருக்கிறது; அதனுடன் கலந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும்' என்ற சிந்தனையே மத்திய அரசுக்கு இல்லாமல் போனதற்கு அடிமைகளின் கையாலாகாத்தனமே காரணம். ஊழல் வழக்குகளில் தப்பிப்பதற்காக ஆரம்பம் முதலே மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்ததன் விளைவே இது.

துரோகம்
அண்டை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ள போது, இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்-புறக்கணிப்பு" என உதயநிதி பதிவிட்டுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications