"பள்ளிகள் சாதிவெறிக்கான களமா? அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய குரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகள் சாதி வெறிக்கான களமாக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவர் படிக்கும் பள்ளியில் சக மாணவர்கள் சாதி பெயரைச் சொல்லி கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Udhayanidhi stalin Coimbatore school student

பள்ளியில் வகுப்பு ஆசிரியர், யாரெல்லாம் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்கள் எனக் கேட்க, அதற்கு அந்த மாணவன், எழுந்துள்ளார். இதையடுத்து, மாணவர்கள் சாதி பெயரைச் சொல்லி கிண்டல் செய்து அவமதித்து வந்துள்ளனர். சக மாணவர்களின் இந்தச் செயலால் மனமுடைந்த மாணவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்தச்சூழலில், கழகம் - முற்போக்கு அமைப்புகள் - மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+