டென்ஷனான உதயநிதி ஸ்டாலின்.. விஜய் அரசை புகழ்ந்த என சினிமா விமர்சகருக்கு கடும் வார்னிங்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''நீண்ட காலத்திற்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் பிறந்துள்ளது'' என்று முதல்வர் விஜய் அரசை பாராட்டிய சினிமா விமர்சகர் ராஜசேகருக்கு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் வார்னிங் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

udhyanidhi-stalin-warns-film-critic-fame-rajasekar-who-praises-cm-vijay-government

தமிழ் சினிமா பற்றி ஏராளமானவர்கள் தற்போது விமர்சனம் மற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பிரபலமான ஒருவர் தான் ராஜசேகர். சினிமா விமர்சகராகவும், பத்திரிகைகளில் சினிமா தொடர்பான கட்டுரைகளையும் இவர் எழுதி வருகிறார்.

இந்நிலையில் தான் ராஜசேகர் நேற்று முன்தினம் தனது எக்ஸ் பக்கத்தில் முந்தைய அதிமுக, திமுக அரசுகளுடன் முதல்வர் விஜய்யின் தவெக அரசை ஒப்பிட்டு பதிவு ஒன்றை செய்திருந்தார். அந்த பதிவில் முதல்வர் விஜய் அரசு என்பத தமிழ் சினிமாவிற்கான பொற்காலம் என்று பாராட்டி இருந்தார்.

இதுதொடர்பாக ராஜசேகர் நேற்று முன்தினம் தனது எக்ஸ் பக்கத்தில், ''தமிழகத்தில் முந்தைய அரசுகள் ( திராவிட கட்சிகள்) திரைப்படங்களுக்கு கூடுதல் காட்சிகள் வழங்குவதில் மிகுந்த கண்டிப்புடன் இருந்தன.

அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இப்போது தவெக அரசு தாராளம் காட்டுகிறது. அரசியல் ரீதியாக போட்டியான ஒரு தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோக நிறுவனத்திடமிருந்து வந்த ஜெயிலர் 2 படத்திற்கும் காலை 8.30 மணி காட்சிக்கு அனுமதி வழங்கியது.

தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் இல்லை. திரையரங்கங்களின் உரிமையாளர்களுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் விரைவில் 6 மணி காட்சிக்கும் அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு சினிமாவிற்கு பொற்காலம். சுதந்திரமான சந்தையாக சினிமா துறை தொடர உறுதி செய்த தமிழக முதல்வருக்கு நன்றி'' என்று கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் டென்ஷனானார். நேரடியாக அந்த பதிவுக்கு பதிலளித்தார். அப்போது அவர், ''ஹாய் ராஜசேகர்.. எப்படி இருக்கீங்க? போலியான செய்திகளை பதிவிடும் முன்பு அதுபற்றிய ஆராய்ச்சி மற்றும் அறிவை பெற வேண்டும். மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு என்னை சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் செய்து விடாதீர்கள். கவனமாக இருங்கள்'' என வார்னிங் செய்தார்.

இதற்கு சினிமா விமர்சகர் ராஜசேகர், ''ஹாய் உதய் சார்.. என்னுடைய கரத்தில் ஏதேனம் தவறு இருந்தால் நிச்சயம் அதை சரிபார்த்து முறையாக ஆய்வு செய்கிறேன்'' என கூறியுள்ளார். ராஜசேகர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையேயான இந்த பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.

இந்த பதிவை தொடர்ந்து தவெகவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும், ராஜசேகருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் திமுகவினர் உதயநிதிக்கு ஆதரவாக தவெகவினரை விமர்சித்து வருகின்றனர். இது தற்போது எக்ஸ் வலைதளத்தில் பரபரப்பான மேட்டராக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+