“அற்ப அரசியலுக்காக பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்டால் அண்டை மாநிலங்களுக்கே லாபம்"- உதயநிதி ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும், அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது திமுக. பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

Udhayanidhi Stalin

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.

இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர்
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.

இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.

ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+