அமெரிக்காவிலிருந்து நேராக தாத்தா சமாதிக்கு வந்து கண்கலங்கினார்: விஜய்காந்த் குறித்து உதயநிதி பதிவு
சென்னை: அமெரிக்காவிலிருந்து நேராக தாத்தா கலைஞர் கருணாநிதியின் சமாதிக்கு வந்து கண்கலங்கினார் என்று விஜய்காந்த் குறித்து உதயநிதி ஸ்டாலின் வீடியோவில் உருக்கமாக பேசி உள்ளார்.
Recommended Video
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 69வத பிறந்த நாளையொட்டி அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்,
அந்த வீடியோவில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது: "மதுரையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்தான் கேப்டன் விஜயகாந்த். தன்னுடைய அயராத உழைப்பால் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராகவும், அரசியலில் மிக முக்கிய தலைவராகவும் உருவெடுத்தார்.

விஜயகாந்த் பாசம்
எளிய மக்களுக்காக நிறைய உதவிகளை கேப்டன் விஜயகாந்த் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். கேப்டன் விஜயகாந்த், முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தார். இதேபோல் கலைஞரும் விஜயகாந்த் மீது தனி பாசம் வைத்திருந்தார்.

விஜயகாந்த்
கலைஞர் கருணாநிதி மறைந்த போது, கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருந்தார். அப்போது விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட வீடியோவில், கலைஞர் மீது அவருக்கு இருந்த தூய்மையான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தியது.

கலைஞர் நினைவிடம்
அமெரிக்காவில் இருந்து வந்த உடனேயே நேராக கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கு போய் மரியாதை செலுத்தினார். கலைஞருடன் மட்டுமல்ல, நம்முடைய முதல்வர் ஸ்டாலின் அவர்களிடமும் நல்ல நட்பு பாராட்டுபவர். நான் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஜெயித்த உடன் கேப்டன் விஜயகாந்த் அவர்களை சந்தித்து அன்பையும் வாழ்த்தையும் பெற்றேன். சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, முதல்வர் ஸ்டாலின் அவர்களும், கேப்டன் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

விஜயகாந்துக்கு வாழ்த்து
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரைதுறை பயணம், அரசியல் பயணம் இளைய சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாலமாக இருக்கும். அவர் பல ஆண்டுகள் முழு ஆரோக்கியத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று என் சார்பாகவும், திமுக இளைஞரணி சார்பாகவும், அன்பையும் வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications