உதயநிதியின் அடுத்த அதிரடி.. புது ரத்தம் பாய போகும் இளைஞர் அணி.. தயாராகிறது நிர்வாகிகள் லிஸ்ட்
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியல் தயாராகி வருகிறது
Recommended Video
சென்னை: இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற ஒருசில தினங்களிலேயே உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடிகளை கண்டு திமுக இளைஞர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
போன வாரம் உதயநிதிக்கு புதிய பொறுப்பு தரப்பட்டது. எனினும் இவருக்கு ஏன் இந்த பதவியை தர வேண்டும், கட்சிக்கு இதுவரை இவர் என்ன செய்துவிட்டார் என்ற கேள்விகள், விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இது எதையுமே காதில் வாங்கி கொள்ளாத உதயநிதி, அடுத்தடுத்த தனது வேலைகளில் பிசியாகி விட்டார். பொறுப்பேற்ற கையோடு தாத்தா அன்பழகன், அத்தை கனிமொழி, என்று பெரியவர்களிடம் ஆசி வாங்கிய கையோடு, அன்பாலயம் வந்துவிட்டார்.

சுற்றுப்பயணம்
மாவட்ட, மாநில ரீதியான நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் இளைஞர் அணியை எப்படி பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசப்பட்டது. கூட்டம் முடிந்ததுமே செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய போகிறேன் என்று அடுத்த அதிரடியை தெரிவித்தார்.

களையெடுப்பு?
இப்போது, மாநிலம் முழுவதும் காலியாக உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் பதவியை நிரப்புவது குறித்த வேலையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லை, சரியாக வேலைபார்க்காத, செயல்படாத நிர்வாகிகளையும் களையெடுக்க முடிவு செய்துள்ளாராம்.

அன்பில் மகேஷ்
ஆரம்பத்தில் இருந்தே உதயநிதி ஸ்டாலினின் அனைத்து நடவடிக்கையிலும் அவருடைய நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்து வருகிறார். அதுபோலவே இந்த விவகாரத்திலும் துணை நின்று இதற்கான பணிகளை கவனிப்பதாக சொல்கிறார்கள்.

குஷியில் இளைஞர்கள்
புது ரத்தம் பாய்ச்சும் வகையில் இந்த புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறும் என்றும், உதயநிதியின் ரசிகர் மன்றத்தில் திறம்பட செயல்படும் நபர்களும் நிர்வாகிகள் லிஸ்ட்டில் அநேகமாக இடம்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 15 நாளில் இந்த லிஸ்ட் ரெடியாகும் என்று சொல்லப்படுவதால், திமுக இளைஞர் அணி தரப்பினர் ஏக குஷியில் காணப்படுகின்றனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா












Click it and Unblock the Notifications